You are here

தொழில் நிலை ஓர் பார்வை

தொழில் நிலை ஓர் பார்வை

jothidam
0
by aadhiguru

பலமான தொழில் அமைப்பும் லாபமும் யாருக்கு அமையும்

இரண்டாம் வீடும், தொழிலை அறிதலும்

ஒருவரின் தொழில் நிலை நிர்ணயம் செய்வது ஜோதிடருக்கு சுலபமான வேலையல்ல.ஏனெனில், பெருகிவரும் நவீன தொழில் நுட்பங்களின் காரணமாகத் தொழிலைப் ஏற்படும் போட்டி காரணமாக மாறுபட்ட புதுப்புதுப் பிரிவுகளில் சிறப்புப் பயிற்சி பெறுதல் போன்ற முனிவர்களின் காலங்களில் இல்லாத தொழில்களெல்லாம் உருவாகியுள்ள நிலையில் தற்கால சூழலுக்கு ஏற்ப கிரகங்களுக்கான தொழில் காரகங்களை அனுமானித்து ஜாதகரின் தொழில் நிலை காண ஜோதிடர்கள் புத்தி கூர்மையுடன் பலன் காண வேண்டியது அவசியமாகிறது.   

பொதுவாக தொழிநிலை என்ற உடன் நம் கண்கள் 10 ஆம் இடம் மற்றும் அதன் அதிபதியை மட்டுமே நோக்கிச் செல்லும். ஆனால் அனுபவத்தில் 10 ஆம் பாவம்மற்றும் அதன் அதிபதியை மட்டும் கொண்டு தொழில்நிலையை நிர்ணயம் செய்யாமல் இரண்டாம் இடத்தையும், அதன் அதிபதியையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இரண்டாம் இடம் பொதுவாக ஜாதகரின் பொரிளாதார நிலையை சீர்தூக்கிப் பார்க்க உதவுகிறது.

 ஜாதகரின் வருமானத்திற்கான வழிமுறைகளையும் 2 ஆம் இடம் மற்றும் அதன் அதிபதி மூலமாக அறிய முடியும். எனவே, தொழில் நிலையைக் காண 2 ஆம் இடத்தையும் இணைத்துப்பார்பது அவசியமாகிறது.

10 ஆம் பாவம் மற்றும் அதன் பலம் தொழிலில் ஒருவரின் உயர் நிலையையும்,கௌரவத்தையும் குறிகாட்டுகிறது. உதாரணமாக, ஜாதகர் ஆசிரியத் தொழில் மூலம் வருமானம் அடைவாரென்று 2 ஆம் வீடு காட்டினாலும் 10 ஆம் இடமே அவர் ஆரம்பப் பாடசாலை ஆசிரியரா? கல்லூரிப் பேராசிரியரா ? – என்பதை நிர்ணயிக்கிறது.

        

10 ஆம் இடத்தின் , அதிபதியின் பலம், இலக்னாதிபதி பலம் இவற்றைப் பொருத்தே அவர் தலைமை ஆசிரியரா ? பேராசிரியரா ? துணைவேந்தரா ? – என்பதை நிர்ணயிக்க முடியும்.ஆனாலும், ஆசிரியத் தொழில் மூலமாக வருமானம் அடைவாரா ? – என்பதை நிர்ணயிப்பது     2ஆம் இடமே ஆகும்.

 ஜாதக பாரிஜாதத்தில் கூறியுள்ளபடி ; - சூரியன், புதன், குரு மற்றும் சனி ஆகியோர் பல்வேறு தொழில் காரகராகிறார்கள். சூரியன் = அரசர், அரசியல்வாதிகள், புதன் = வணிகம், வங்கி,தொழிற்சாலை, குரு = விவசாயம், பக்தி மார்க்கம், மதம் மற்றும் கற்பித்தல், சனி = சேவை மற்றும் யாசித்தல் ஆகும். ஆனால், எப்படி இத் தொழில்களுக்கான சரியான காரகரைக் கண்டறிவது ? ஜாதகர் உத்தியோகம் செய்வாரா ? வியாபாராமா ? அல்லது விவசாயமா ? –இந்தக் கேள்விகளுக்கான முடிவுகள் இந்த நான்கு காரகர்களையும் ஒன்றாகக் கலந்து முடிவுக்கு வர இயலாது. இது குழப்பத்தையே உண்டு பண்ணும் – எனக் குறிப்பிடுகிறது.

 
இரண்டாம் வீடு ; சொத்து மற்றும் வருமானம் வரும் வழிகளைக் குறிகாட்டுகிறது. ஏனெனில், 11 ஆம் வீடு 2 ஆம் வீட்டுக்கு 10 ஆம் வீடு ஆகும். காலபுருஷனுக்கு 2 ஆம் வீட்டு அதிபதி சுக்கிரன் ஆவார். எனவே, சுக்கிரனே பிரதான காரகர் ஆவார். 10 மற்றும் 11 க்கு உரியவர் சனி ஆவார்.அவர் கர்மகாரகரும் ஆவார், சனி, சந்திரன் இணைவு எண்ணங்களில் நிலையற்ற தன்மையையும்,உணர்ச்சி வசப்படுதலையும், கவலைகளுக்கும் காரணமாகின்றன. வெவ்வேறு இராசிகளில் சனியின் நிலை அந்த இராசியின் இயற்கை குணம், அதன் அதிபதியின் குணத்தைப் பொருத்தும் மாறுபடுகிறது.

இவ்வாறாக இலக்னத்தில் இருந்து 2 ஆம் இடமும் ஜாதகரின் தொழில் மீதான கட்டுப்பாட்டையும் காலபுருஷனுக்கு 2 – 10 ஆம் அதிபதிகளான சுக்கிரன் மற்றும் சனியும் வாழ்வாதாரத்திற்கான காரகராகிறார்கள். ஜாதகத்தில் 10 ஆம் வீடு ஒருவரின் தொழில் நிலையை காண மிக முக்கியமான பாவகமாகும். ஆனால், தனத்தைக் குறிக்கும் 2 ஆம் வீட்டை ஒதுக்கிவிடக் கூடாது.

ஜோதிடர்கள்  தொழில்நிலையைக் காண்பதற்கான கீழ்க்கண்ட விஷயங்களை முழுவதுமாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

1.   தொழிலா ? சேவையா ? வியாபாரமா ? என ஒவ்வொரு கிரகாத்தாலும், இராசியாலும்குறிகாட்டப்படுகிறது.

2.   தன யோகத்தின் பலமானது ஒருவரின் தொழிலின் கௌரவத்தை நிச்சியிக்கும்.10 இல்செவ்வாய் பலமிக்க தன யோகத்துடன் இருக்க ஜாதகர் இராணுவ ஜெனரலாக, காவல்துறைஉயர் அதிகாரியாக அல்லது அத் துறை மந்திரியாக இருப்பார். அதுவே, பலமற்ற தனயோகமானால், அவர் ஒரு சிப்பாயாகவோ, காவலராகவோ மட்டுமே பணிபுரிவார்.தனயோகத்தை நிர்ணயிக்க 2, 11, 5,
 9 ஆகிய பாவகங்கள், அதன் அதிபதிகள், அவர்களின்இணைவுகள், பார்வைகள் மற்றும் பரிவர்த்தனைகள் ஆகியவை காணப்பட வேண்டும்.தரித்திர யோகத்தைத் தரக்கூடிய  கிரகம் ஜாதகரை பிச்சை எடுக்கக் கூட வைத்துவிடும்.தனயோகமோ ஒருவரை அரசனாகவோ அதற்கு இணையானவராகவோ ஆக்கிவிடும்.

3.    ஒரு கிரகத்தை மட்டும் வைத்துத் தொழிலை நிர்ணயம் செய்ய முடியாது. ஒரு கிரககுழுக்களின் தாக்கம் மற்ற கிரகங்களுடனான இணைவு மற்றும் தொடர்பே அதைத்தீர்மானிக்கும். பாவங்களும் இதில் முக்கியப் பங்கு வகிக்கும். உதாரணமாக, குரு , புதன்,சுக்கிரன் ஆகியோர், குறிப்பிட்ட பாவகங்களுக்குத் தங்கள் தாக்கத்தைத் தரவேண்டும். ஒருவக்கீலின் ஜாதகத்தில், தர்க்கம், வாதத்திறமைக்குக் காரகனான புதனின் தாக்கம் இருக்கவேண்டும். சுக்கிரன்
துலாராசியின் அடையாளம் தராசு, நீதிக்கும் நேர்மைக்கும் காரகர். குரு நியாயத்திற்கும், உண்மைக்கும் காரகர் ஆவார். 5 மற்றும் 6 ஆம் பாவங்களும் இங்குமுக்கிய பங்கு வகிக்கின்றன.

 6 ஆம் வீடு வழக்கு விவகாரங்களையும், 5 ஆம் வீடு சாதுர்யத்தையும், அறிவு பூர்வமாக வாதிடும் திறமையையும், தந்திரமாக உண்மையைத்திரித்துப் பேசும் திறமையையும் குறிக்கிறது. நவீன காலத்தில், ஒவ்வொரு கிரகமும் பலதொழில்களுக்கான காரகங்களைக் கொண்டுள்ளன. எனவே, தொழிலைத் தீர்மானிக்க பலகாரணிகளைக் கருத்தில் கொள்ளவேண்டும். அவையாவன ;-

1.   2 மற்றும் 10 ஆம் அதிபதியின் இராசிகள் மற்றும் அவை நவாம்சத்தில் இருக்கும் இராசிகள்.

2.   காரகர்கள்- சுக்கிரன் மற்றும் சனியைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

3.   2 மற்றும் 10 ஆம் பாவத்தைப் பார்க்கும் கிரகங்கள். அந்த பாவங்களின் அதிபதிகள் நிற்கும்இடங்கள்.

இவை அனைத்தையும் ஒருவரின் தொழில்நிலை காண அலசி ஆராயப்பட வேண்டியகாரணிகள் ஆகும்.

மேலும் பல ஜோதிடதகவலுக்கு www.aadhiguru.com

9600666225,

சென்னையில் சிறந்த முறையில் 5 வருடத்திற்கும்

மேல் ஜோதிட பயிற்ச்சி அளித்து பல மாணவர்களை ஜோதிடராக ஆக்கி வருகின்றோம் . அன்புடன் ஸ்ரீ ஆதி குரு ஜோதிட ஆராய்ச்சி மையம் .

Comments

Add new comment