You are here

கழிவு முத்திரை:

கழிவு முத்திரை:

jothidam
0
by aadhiguru

அண்டத்தில் உள்ளதே, பிண்டத்திலும் உள்ளது என்று சித்தர் பெருமாட்டி ஔவைப்பாட்டிகூறியதில் இருந்து நமது உடல் எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

 

“உடம்பை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுள் உறுபொருள் கண்டேன்
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

என்கிறார் திருமூலர் பெருமான்”

 

உடல் என்பது ஒரு இழுக்கானது என்று நான் தவறாக எண்ணியிருந்தேன். அந்த உடலுக்குள் ஒரு மிகவும் ஆற்றல் வாய்ந்த, கற்பனை கூடச் செய்து பார்த்திர முடியாத ஒரு பொருள் இருப்பதைக் கண்டு கொண்டேன். எனவே நான் உடலைப் பேணி வளர்க்கிறேன், அதன் மூலம் உயிரையும் பேணி வளர்க்கிறேனே என்கிறார் திருமூலர்.

 

  • எனவே, உடல் என்பதும், அவ்வுடலுக்குள் குடி கொண்டிருக்கும் அந்த இறைப் பொருளை உணர்ந்தவர்களே பேரரறிவாளர்கள் எனும் சித்தர்களின் கூற்று.
  • அப்படிப்பட்ட உடலை நாம் பேணிக்காப்பது என்பது உயிரையும், அந்த உயிருக்குக் காரணமாக இருக்கும் இறை ஆற்றலையும் நாம் உணர்வதற்கான வழி முறையாகவும் சித்தர் கூற்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
  • அது மிக உயர்ந்த ஒரு உணர்வு நிலை எனினும், நமது அன்றாட வாழ்வில் இயன்றவரை ஊசி, மாத்திரை, மருத்துவத்திற்குச் செல்லாமல் நம் உடலைக் காப்பாற்றிக் கொள்ளவும், உடலைப் பாதுகாத்துக் கொள்ளவுமே, சித்தர் பெருமக்கள் நமக்குக் ஓகக் கலைகளை நல்ல வழிமுறையோடு கையாண்டால் நாமளும் சித்தனாகலாம்
  • இந்த ஓகத்திற்கு வடமொழியில் யோகம் என்று பெயரானது
  • அந்த ஓகக்கலைகளில் ஒன்றுதான் முத்திரை ஓகம்,கை விரல்களைக் கொண்டு செய்யப்படும் முறையாகும்.

யோகப்பயிற்சி செய்யும் காலம்:-
< >காலை எழுந்தவுடன் உணவுக்கு முன், மதியம் உணவுக்கு முன், மாலையில் உணவுக்கு முன் அல்லது உணவு அருந்திய ஒரு மணி நேரம் கழித்து இப்பயிற்சிகளைச் செய்யலாம்... இதனை நாம் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே, பேருந்தில், ரயிலில், விமானத்தில் பயணித்துக் கொண்டே, நண்பர்களுடன், குடும்பத்தினருடன் பேசிக்கொண்டே செய்யலாம்.        இப்போதைய காலகட்டத்தின் அடிப்படையில், உணவிலேயே ரசாயன நச்சுகள் கலந்துவிட்ட காலத்தின் அடிப்படையில் முதலில் , கழிவு நீக்கும் முத்திரையில் இருந்து தொடங்குவதையே சிறந்தது

கழிவு முத்திரை:

நம் உடலில் உள்ள நச்சுக்களை அகற்றும் சுலபமான வழி, நம் விரல்களிலேயே உள்ளது. அதுதான் கழிவு நீக்க முத்திரை. கட்டைவிரல் நுனியால் மோதிர விரலின் அடிப் பகுதியில் உள்ள ரேகையைத் தொட்டு அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். உட்கார்ந்து கொண்டும், நின்று கொண்டும் இந்த முத்திரையை செய்யலாம்.கழிவு நீக்கும் முத்திரையை ஆரம்பத்தில் குறைந்தது 5 முதல் 21 தினங்கள் செய்வது நல்ல பலனைக் கொடுக்கும்.முதன்முதலாகச் செய்பவர்கள், மூன்று வாரங்கள் வரை செய்யுங்கள். பிறகு, மாதத்துக்கு மூன்று நாள் செய்தாலே போதும். மருந்துகளை உட்கொள்வோர், இந்த முத்திரையைச் செய்தால், அதிகமாக நீர் அருந்த வேண்டியது மிக அவசியம். இந்தப் பயிற்சியை காலை (ம) மாலை 10 முதல் 21 நிமிடங்கள் செய்யலாம். அல்லது காலை, மாலை, இரவு என மூன்று நேரங்களில் தலா 15 நிமிடங்கள் என ஒரு நாளைக்கு 45 நிமிடங்கள் வரை செய்யலாம்அதன்பிறகு மாதம் மூன்று தினம் மட்டும் காலை 10 முதல் 21 நிமிடங்கள் செய்தால் போதுமானது இந்த முத்திரை செய்தபின் தண்ணீர் சற்று அதிகம் குடிப்பது நல்லது.பசி உணர்வில் சில மாற்றங்கள் ஏற்படும் சிறுநீர் அதிகமாக வெளியேறும்வயிற்றுப்போக்கு ஒன்றிரு முறை நிகழும்.. இது இந்த முத்திரையைத் தவறாது செய்து வந்தால் சிலருக்குத் தோன்றக்வடிய விளைவுகள். அதுபோன்ற வேளைகளில் எலுமிச்சை சாறு, வெந்நீர், மோர் ஆகியவற்றைக் குடிக்கலாம். எளிதில் செரிக்கக்கூடிய உணவை உண்ணலாம்.புதிதாகச் செய்பவர்களுக்கு, சில நாட்களுக்கு மட்டும் பசி எடுக்காது. எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளைச் சாப்பிடுவதே நல்லது. வயிறுமுட்ட, சாப்பிடக் கூடாது.தரையில் அமர்ந்திருந்தாலும், இருக்கையில் (நாற்காலி) அமர்ந்திருந்தாலும் முதுகெலும்பு நேராக இருக்கமாறும், தலை நிமிர்ந்த நிலையில் இருப்பதும் அவசியம்.சீரற்ற மாதவிலக்குப் பிரச்னை தீரும். உடலும் மனமும் ஆரோக்கியமாகும். நோய்கள் இன்றி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ, கழிவு நீக்க உதவும்..புகை, மது போன்ற தீயப் பழக்கங்களிலிருந்து வெளிவர இந்த முத்திரை.உடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேறும். கெட்ட கொழுப்புகள் கரையும்.

Comments

Add new comment