You are here

கிரஹணம்

கிரஹணம்

jothidam
1
by karunagaran

*சந்திர_கிரஹணம்*  (16.07.2019)- (17-07-2019)செவ்வாய்க்கிழமை  இரவு #
கிரகண நேரம் =(இரவு 1.32 முதல் 4.32 வரை)

#சந்திர_கிரஹணம் என்றால் என்ன ?*  
பூமியின் நிழல் சந்திரனில் விழும்போது, சந்திரன் மறைக்கப்படுகிறான். அதுவே சந்திர கிரஹணம்.

கிரஹணம் காரணமாக... சந்திர ஒளிக்கதிரின் பரவல் தடைபடும்போது, ஜீவ ராசிகளுக்கு மன மாறுதல் ஏற்படுவது இயல்பு. இது, நம் சிந்தனையையும் செயல்பாட்டையும் மாற்றும். சுகாதாரத்தையும் பாதிக்கும். எனவே சந்திர கிரஹணத்தின்போது, நம் உடல்- உள்ளம் ஆகியவற்றின் செயல்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டும்.

கிரஹண காலத்தை புண்ணிய காலம் என்கிறது தர்ம சாஸ்திரம்.

*#ஜபம்* - 
மனத் தூய்மையை ஏற்படுத்தும்;  
*#தானம்* - மனதைப் பக்குவப்படுத்தும்;  
#முன்னோர்வழிபாடு* - நமது சிந்தனையை சரியான வழியில் திருப்பிவிடும்.  
  
ஆகவே, கிரஹண வேளையில் இந்த மூன்றுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதனால், பன்மடங்கு பலன் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம்.

#பரிகாரம்_செய்ய #வேண்டியவர்கள் 
  
தோன்றவுள்ள இந்த முழு சந்திர கிரகண நாளில் பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், கிருத்திகை, ரோகிணி, உத்திரம், ஹஸ்தம், நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்வது நல்லது என ஜோதிடர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும் சந்திர கிரகணம் முடிந்த பின்னர் ரிஷபம், சிம்மம், கன்னி, மகரம், கும்பம், ஆகிய ராசிகளில் பிறந்தவர்களும் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்

#சந்திர கிரகணம் அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?*

#கிரகணம் நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது. எனவேதான் ஆலயங்கள் அனைத்தும் மூடப்பட்டு விடுகின்றன. ஆலயங்களில் எந்த வழிபாடும் நடக்காது. கிரகணம் முடிந்து சூரியன் உதயம் ஆன பிறகு, புண்ணியாகவாசனம் செய்து, வருணனைக் கலசத்தில் ஆவாஹனம் செய்து கோயிலில் தெளித்த பிறகே, கோவில்களில் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்படும்.

#கிரகணம் தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னரே #கிரிவலம் #செல்பவர்கள் #வழிபாட்டைமுடித்துவிட #வேண்டும்.

#கிரஹணம் துவங்கும்போது நீராட வேண்டும். கிரஹணம் முடிந்ததும், மீண்டும் நீராட வேண்டும்.

#கிரஹண வேளையில், மறை ஓதுபவர்கள் வேதத்தைச் சொல்லலாம். மற்றவர்கள் நமசிவாய, நமோ நாராயணாய என்றோ அல்லது தெரிந்த அம்பாள் துதி, நவக்ரஹ துதிகளை சொல்லலாம்.

#கிரஹண வேளையில், சாப்பிடக்கூடாது, தண்ணீர் குடிக்கக்கூடாது, வீட்டில் சமையல் செய்யக்கூடாது, நகம் வெட்டக்கூடாது என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

#கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு #முன்னதாகவே சாப்பிட்டுவிட வேண்டும். சமைத்து வைத்த #உணவுகளில்தர்ப்பை #புல்லினை_போட்டு #வைக்க_வேண்டும்.

#கிரகண_சமயத்தில் தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டும். ஒரு பெண் இந்தச் சமயத்தில் கர்ப்பம் தரித்தால் #குறைபாடுள்ள 
#குழந்தை_பிறக்க_நேரிடும்.

#கிரகண காலத்தில் உடலில் எண்ணெய் தேய்ப்பது போன்ற செயல்களைச் செய்யக்கூடாது.

#கிரகணம் முடிந்ததும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது.

#கிரகணம் முழுவதும் முடிந்த பிறகு குளித்து விட்டு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும். #ஆலய_தரிசனம் மேற்கொண்ட பிறகே #சாப்பிடவேண்டும்.

#சந்திரகிரகண காலத்தில் #வீட்டில்_இருந்தபடியே இறைவனை துதித்து, இறை பாடல்களை பாராயணம் செய்வது #நல்ல_பலன்களை #கொடுக்கும்.

சந்திர கிரகணத்தன்று உயர்வுக்காகவும் நன்மைக்காகவும், தர்ம சாஸ்திரத்தின் பரிந்துரையைப் பின்பற்றுவோம்

அன்புடன் ஸ்ரீ ஆதி குரு ஜோதிட ஆராய்ச்சி மையம்

சென்னை. Web: aadhiguru.com, CeII: 9600 666 225.

Comments

My spouse and I absolutely love your blog and find most of your post's to be what precisely I'm looking for. can you offer guest writers to write content available for you? I wouldn't mind composing a post or elaborating on a number of the subjects you write with regards to here. Again, awesome weblog!

Add new comment