சனி கிரகத்தின் ஒர் பார்வை
சனி எப்படி பலனை தருவார்
இந்தியாவில் மட்டும் ஒரு ராசிக்கு சுமார் 10 கோடி பேர் வீதம் 12 ராசிகளுக்கும் 120 கோடி பேர் உள்ளனர்.
இவர்கள் எல்லோருமே 12 ராசிக்குள் அடக்கம். இவர்கள் எல்லோருக்கும் கோசார பலன் ஒரே விதமாக இருக்க முடியாது. வேறுபடும், மாறுபடும். அதை புரிய வைப்பதற்காகவே இந்த பதிவு.
பிறவி ஜாதகத்தில் உங்கள் லக்னப்படி சனி பகவான் லக்ன சுபராக இருந்து விட்டால் கெடு பலன் செய்யாமல் நற்பலனை வாரி வழங்கி விடுவார்.
பிறவி ஜாதகத்தில் லக்னப்படி சனி பகவான் அசுபராக இருந்துவிட்டால் கோசாரத்தில் கெடு பலனை அதிகம் வாரி வழங்கிவிடுவார்.
மேலும் பிறவி ஜாதகத்தில் சனி பகவான் கேந்திர திரிகோணங்களில் ஆட்சி உச்சமாக இருந்தால் கோட்சாரத்தில் கெடு பலன் அதிகம் தரமாட்டார்.
சுபகிரகங்களான குரு, சந்திரன், புதன், சுக்கிரன் பார்வை, சேர்க்கை பெற்றிருந்தாலும், கோட்சாரத்தில் நல்ல பலனை வழங்கும்.
மேலும் கிரக வேதை, நீச்சம், அஸ்தமனம், நட்சத்திர சாரம் ஆகியவைக் கொண்டும் பலனில் மாற்றம் தரும்.
மேலும் மொத்தம் ஒன்பது கிரகங்களின் இயக்க நிலையின் ஒட்டு மொத்த பலன்தான் நடைபெறும் நன்மை தீமைகள். உதாரணமாக சனி தீமை செய்யும் இடத்தில இருந்தாலும் மற்ற நல்ல கிரகங்கள் தமது பார்வை, சேர்க்கை, ஸ்தான பலன் மூலமாக, சனியின் கெடு பலனிலிருந்து தப்புவிக்கவும் அதிகாரம் உண்டு. நற்பலனைக் கூட்டு விக்கவும் அதிகாரம் உண்டு.
ஆகவே சனி பெயர்ச்சிப் பலனை ஒரு வழிகாட்டியாக நேயர்கள் எடுத்துக் கொள்ளுங்கள். நல்ல யோக திசை நடைபெறுபவர்களுக்கு கோட்சார பலன் அதிகம் பாதிக்காது. கெட்ட திசை நடைபெறுபவர்களுக்கு கோட்சாரப் பலன் பாதிப்பு கூடுதலாகவே இருக்கும் என்பதை கவனத்தில் வைக்கவும்.
பொதுவாக சனி பகவான் 1,2,4,5,7,8,9,10 இல் சஞ்சரிக்கும்போது கோட்சாரத்தில் கெடுபலன் தரும் என்பர்.3,6,11இல் வரும் போது நற்பலனை வழங்கும் என்பார்கள். இது எல்லோருக்கும் பொருந்தாது. ரிஷிபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சனி சுபர், யோகம் செய்யும் கிரகம். ஆதலால் தீய பாவத்தில் சஞ்சரித்தாலும் எப்படி அதிக கெடுபலனை வழங்குவார் என்பதை யோசியுங்கள்.
மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சனி அசுபர் ஆதலால் இவர்கள்தான் மிக மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
Många som överväger behandling mot erektionsproblem vill först få en tydlig bild av kostnaderna. Genom att söka information online kan man enkelt jämföra olika alternativ och villkor. Ett vanligt sökintresse gäller priset på Viagra, eftersom detta läkemedel är välkänt och ofta använt. Att ha insyn i prisbilden gör det lättare att planera sitt köp. Samtidigt är det viktigt att även ta hänsyn till kvalitet och säkerhet.
இந்த லக்னக் காரர்கள்தான் சனி பெயர்ச்சி பலன்களை பூரணமாக உணர்வார்கள். அதன்படி இந்த சனி பெயர்ச்சி மேஷம், விருச்சிகம், தனுசு, மீன ராசிகள் மட்டும் சிரமங்களை கஷ்டங்களை அதிகம் உணர்வார்கள் மற்ற ராசிக்காரர்கள் அதிகம் சிரமம் அடைய மாட்டார்கள் என்பது ஆறுதலான தகவல்
நன்றி அன்புடன் ஆதி குரு ஜோதிடம்.
Cell 9600666225
Comments
Ssthiyanathan
Super sir
Add new comment