You are here

சந்திரன்

சந்திரன்

jothidam
0
by aadhiguru

ஸ்ரீ ஆதி குரு ஜோதிடத்தின் அன்பான வணக்கம் .

ஜோதிடம் சாஸ்திரம் கிரகங்கள் பூமியை சுற்றிவருவதாக சொல்லவில்லை. பூமியிலிருந்து வானத்தை பார்க்கும்போது. பூமியை சுற்றிலும் தென்படும் நட்சத்திர கூட்டங்களால் ஆன ஒரு வட்டப்பாதையில் கிரகங்கள் நகர்ந்து செல்வதுபோல் காட்சியளிக்கின்றன. உண்மையில் சந்திரனைத்தவிர வேறு எந்த கிரகமும் பூமியை சுற்றவில்லை. அவை சூரியனையே சுற்றிவருகின்றன. நவக்கிரகங்களில் ஒன்றான சந்திரனுக்கு மூன்று வகையான சுழற்சிகள் உண்டு. அவை
1. சந்திரன் பூமியை சுற்றுகிறது.
2. சந்திரன் தன்னைத்தானே சுற்றுகிறது. 
3. சந்திரன் பூமியோடு சேர்ந்து சூரியனையும் சுற்றுகிறது. 
நவக்கிரகங்களில் பூமியை மிக வேகமாக சுற்றும் கிரகம் சந்திரனாகும். இந்த சந்திரனுக்கு வளர் பிறை,தேய் பிறை தோற்றம் உண்டு. இந்த சந்திரன் வெண்மை நிறமாக காட்சியளிக்கிறது. பூமிக்கு மிக அருகாமையில் சுற்றிவரும் கிரகம் சந்திரனாகும். 

aadhiguru.com
ஒரு தாயின் மனமும் உடலும் எப்பொழுதும் தான் பெற்ற குழந்தைகளையே சுற்றிக்கொண்டிருக்கும். அதுபோல் சந்திரன் பூமியில் வசிக்கும் ஜீவ ராசிகளையே சுற்றி சுற்றி வருவதால், இந்த சந்திரனை தாய்க்கு ஒப்பிட்டு மாத்ருக்காரகன் என அழைக்கப்படுகிறது. 
இந்த சந்திரன் அமாவாசை நாட்களில் வானத்தில் தெரிவதில்லை. அமாவாசைக்கு அடுத்த நாள் வானதில் ஒரு அரை வட்டக்கோடுபோல் தோன்றி அடுத்து வரும் நாட்களில் படிப்படியாக வளர்ந்து பௌர்ணமி நாளில் முழுவட்டமாக காட்சி தருகிறது, பொர்ணமிக்கு அடுத்த நாள் முதல் படிப்படியாக தேய்ந்து மீண்டும் அமாவாசை நாளில் வானத்தில் தென்படாமல் மறைந்துவிடுகிறது. இவ்வாறு சந்திரன் தோன்றி வளர்ந்து, பின் தேய்ந்து மறைந்து போகும் தன்மையானது. மனித உடல் தோன்றி வளர்ந்து ,பின் தேய்ந்து மறைந்து போகும் நிலையுடன் ஒப்பிடப்பட்டு , சந்திரன் உடல் காரகன் என அழைக்கப்படுகிறது. 
கிரகங்களில் மிகவும் வேகமாக சுற்றக்கூடியது சந்திரனாகும். இது போல் மனித மனதும் வேகமாக மாறக்கூடியதாகும். எனவே மனோ வேகம் , சந்திரனின் வேகத்திடன் ஒப்பிடப்பட்டு, சந்திரன் மனோக்காரகன் என அழைக்கப்படுகிறது. 

aadhiguru.com
சூரியன் மட்டுமே சுய ஒளியில் பிரகாசிக்கும் கிரகமாகும். மற்ற கிரகங்கள் அனைத்தும் சூரிய ஒளியையே பிரதிபலிக்கின்றன. சூரிய ஒளியை பிரதிபலிக்கும் கிரகமான சந்திரன் மட்டும் ஒளியை மிகவும் அதிகமாக பிரதிபலிக்கிறது. பொர்ணமி நாட்களில் இரவு விளக்கு போன்று காட்சியளிக்கிறது. சந்திரனின் வெளிச்சத்தில் நமக்கு கண் பார்வை கிடைக்கிறது. இதனால் சூரியனைப்போல் சந்திரனும் அனைத்து உயிகளும் எளிதில் காணக்கூடிய ஒரு கிரகமாக உள்ளது. இதன் அடிப்படையில் சந்திரனை பிறர் தயவால் கிடைக்கும் புகழுக்கு காரகனாக நிர்ணயித்திருக்கிறார்கள். மேலும் இடது கண்ணுக்கு அதிபதியாகவும் நிர்ணயித்திருக்கிறார்கள்.

aadhiguru.com
பூமியானது இரு பங்கு நீரும் ,ஒரு பங்கு நிலமும் கொண்டது போல் மனித உடலும் இரு பங்கு நீரும்,ஒரு பங்கு நிலத்தையும் கொண்டுள்ளது. அமாவாசை நாட்களில் கடல் வற்றி உள்வாங்குகிறது. பௌர்ணமி நாட்களில் கடலில் நீர் அதிகமாகி பொங்கி எழுகிறது. இதன் மூலம் நீர் நிலைகள் சந்திரனின் கட்டுப்பாட்டில் உள்ளதை புரிந்து கொள்ளலாம். இதன் அடிப்படையில் நீர் நிலைகளை குறிக்கும் கிரகமாக சந்திரனை நிர்ணயித்திருக்கிறார்கள். மேலும் அமாவாசை நாட்களில் கடல் வற்றுவதுபோல் , அந்த நாட்களில் மனித உடலிலும் ரத்தத்தின் அளவு குறைகிறது . பௌர்ணமி நாட்களில் கடல் கொந்தளிப்பதுபோல் மனித உடலிலும் ரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது. இதன் காரணத்தினால் ரத்தம் மற்றும் உடலில் உள்ள அனைத்து சுரப்பிகளும் சந்திரனின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கருதப்படுகிறது. உடல் வளர்ச்சிக்கு தேவையான உணவுப்பொருள் மற்றும் திரவப்பொருட்கள் அனைத்தும் சந்திரனுக்கு உரியதாக கருதப்படுகிறது. 

aadhiguru.com
ஒரு தாய்தான் தன் குழந்தைக்கு பாலூட்டி, சோறூற்றி போசாக்கு அளிக்கிறாள். எனவே தாய்க்கு காரகனான சந்திரனே உணவுப்பொருளுக்கும், திரவப்பொருளுக்கும் காரகனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளான்.
கடலை சந்திரன் தன் கட்டுப்பாடில் வைத்திருப்பதால் கடலில் கிடைக்கும் வெண் முத்து,வெண் பவழம், வெண் சங்கு போன்றவை சந்திரனுக்கு உரியதாக கூறப்படுகிறது. சந்திரனின் நிறம் வெண்மை என்பது குறிப்பிடத்தக்கது, 
நீரில் வளரும் வெள்ளை அல்லி சந்திரனுக்குரிய மலராக கூறப்படுகிறது. வயலில் நீரில் நின்று வளரும் நெல் தானியம்(அரிசி) வெண்மை நிறமாக உள்ளதால், அது சந்திரனுக்கு உரிய தானியமாகக்கூறப்படுகிறது. 
தாய்மையின் அடையாளமான பால் சுரக்கும் மார்பகம் சந்திரனுக்கு உரிய உடல் உருப்பாகும். பால் வெண்மை நிரத்தில் சுரக்கும் திரவம் என்பது குறைப்பிடத்தக்கது, இதன் அடிப்படையில் பால் தரும் பசு, பால் பொருட்கள் அனைத்தும் சந்திரனுக்குரியதாக கருதப்படுகிறது. 
சந்திரன் வளர்ந்து தேயும் தன்மையைப்போல் உள்ள விரைவில் அழுகிப்போகும் காய்கறிகள் ,பழங்கள் முதலானவை சந்திரனின் காரகப்பொருட்களாகும். 

aadhiguru.com
சந்திரனின் குளிச்சியான ஒளிக்கு மயங்காத மனிதர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எனவே உடல் வசீகரம் மற்றும் முக வசீகரத்திற்கு காரகனாக சந்திரன் நிர்ணயிக்கப்பட்டுள்ளான். 
சந்திரன் எப்பொழுதும் ஒரே மாதிரி தோற்றத்தில் இருப்பதில்லை, எனவே மன சஞ்சலத்தை குறிப்பவனாக சந்திரன் கருதப்படுகிறான்.
சந்திரன் மிகவும் வேகமாக சுற்றக்கூடிய கிரகம் , இதனால் கடலில் அலைகள் தோன்றி நீரை அசைத்துகொண்டே இருப்பது போல் ,மனதிலும் ,உடலிலிலும் சந்திரன் அசைவுகளை ஏற்படுத்துகிறான். இதன் காரணத்தால் மன மாற்றம், உடலுக்கு இடமாற்றம் இவைகளைத்தருபவனாக சந்திரன் கருதப்படுகிறான். இடமாற்றம், பயண சுகம் இவைகளை குறிப்பது சந்திரனாகும். 
வழிபாட்டு முறைகளில் தாய்மையின் அடையாளமாககருதப்படும் அனைத்து அம்மன்களும் சந்திரனுக்குரிய அதிதேவதைகளாகும். 

aadhiguru.com
நோய் தீர்க்கும் பல மூலிகைகள் சந்திர ஒளியில் வளர்வதாகக்கூறப்படுகிறது. எனவே மூலிகைகளை குறிக்கும் கிரகம் சந்திரனாகும். 
அமாவாசை,பௌர்ணமி நாட்களில் மன நோயாளிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவதை அனைவரும் அறிவர். இதன் மூலம் மனதிற்கும் சந்திரனுக்கும் தொடர்பு உள்ளதை புரிந்துகொள்ளலாம். 
சந்திரன் வெண்மையாகக்காணப்பட்டாலும் , அதன் மீது சில கரும்புள்ளிகளும் தென் படுவதைக்காணலாம். எனவே மனிதர்களுக்கு உண்டாகும் களங்கத்தை சந்திரன் குறிப்பதாகக்கூறப்படுகிறது.
எந்த ஒரு கிரகத்தின் கதிர்களும் சந்திரனைத்தாண்டிதான் பூமியை வந்தடைய வேண்டும். எந்த ஒரு கிரகமும் சூரியனின் ஒளியைத்தான் பிரதிபலிக்கவேண்டும். எனவே சூரியனை ராஜா என்றும், சந்திரனை ராணி என்றும் அழைக்கிறார்கள்.
சந்திரனின் சுழற்சிகாலமும் ,பெண்களின் மாதவிடாய் சுழற்சி காலமும் ஒன்றுதான் . அதாவது 28 நாட்களாகும். எனவே சந்தரனுக்கும்,தாய்மைக்கும் சம்பந்தம் உண்டு. எனவே பூப்படைந்த பெண்களின் மீது சந்திரனின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். பெண்களின் மாத விடாய் நிற்கும்போது பலன் பெண்கள் மன உழைச்சலுக்கு உள்ளாவதைக்காணலாம். பூப்படையாத பெண்கள் மீது சந்திரனின் ஆதிக்கம் குறைவாக இருக்கும். 
சந்திரன் ஒளியை மட்டுமில்லாமல் குளிர்ச்சியையும் தரும் கிரகமாகும். எனவே குளிர் சாதன பொருட்களைக்குறிக்கும் கிரகமாகும். மேலும் நீர் பெருக்கி மூலிகைகளான தும்பை, வாழை போன்றவைகளை குறிக்கும் கிரமாகும். பாலுள்ள மரங்களை சந்திரன் குறிக்கும்.

நன்றி

அன்புடன் MR.கருணாகரன்.

Comments

Add new comment