You are here

இந்து லக்னம்

இந்து லக்னம்

jothidam
0
by aadhiguru

இந்து லக்னம்
==============

http://aadhiguru.com

மஹாகாளியின் ஆசிபெற்று, உத்திரகாலமிருதம் எழுதிய மஹாகவி காளிதாசர். தனது புத்தகத்தில் இந்து லக்னம் என்று ஒன்றே பற்றி விவரிக்கிறார். இந்து என்றால் ஒளி பொருந்திய அல்லது ஒளிவீசும் லக்னம் என்று பொருள். மேலும் இதனை லக்ஷ்மி லக்னம் என்றும், தன லக்னம் என்றும் கூறுகிறனர்.

காளிதாசர் தான் பெற்ற ஞானத்தால், ஒவ்வொரு கிரகத்திற்கும் (ராகு கேது தவிர) எண்களை குறிப்பிடுகிறார். அவையாவன:

சூரியன் - 30
சந்திரன் -16
செவ்வாய் - 6 
புதன் - 8
குரு - 10
சுக்கிரன் - 12
சனி - 1

இந்த கிரக எண்கள் என்பன, தன் உச்ச நிலையில் பூமிக்கு ஒளி உமிழும் அளவை பொருத்து நிர்ணயம் செய்யப்பட்டன என்பது எனது தனிப்பட்ட கருத்து. 

http://aadhiguru.com

இந்து லக்னம் கணக்கிடும் முறைகள்
==================================

1. ஜென்ம லக்னத்தில் இருந்து ஒன்பதாம் இடத்தின் அதிபதி மற்றும் அதற்குரிய எண் குறித்து வைத்து கொள்ளுங்கள்.

2. ராசியில் இருந்து ஒன்பதாம் இடத்தின் அதிபதி மற்றும் அதற்குரிய எண் குறித்து வைத்து கொள்ளுங்கள். 

3. அவ்வாறு குறித்துக்கொண்ட எண்களை கூட்டி வரும் எண், 12 விட பெரியதாக இருந்தால், அந்த எண்ணை 12 ஆல் வகுக்க வேண்டும். 

4. அவ்வாறு வகுக்க கிடைக்கும் மீதியை, சந்திரன் இருக்கும் இடத்தில் இருந்து எண்ண கிடைப்பது இந்து லக்னம் ஆகும். ஒரு வேளை 12 என்ற எண்ணே கூட்டல் தொகையாக வந்தால், 12 ஐ சந்திரன் நின்ற இடத்தில இருந்து எண்ணி பார்க்க வருவது இந்து லக்னம் 

5. ஒருவேளை, கூட்டி கிடைக்கும் எண் ஆனது 1 - 12 க்குள் (12 விட குறைவாக) அமைந்தால், அதனை 12 ல் வகுக்க முடியாது, அதனால் அந்த எண்ணை அப்படியே எடுத்து கொண்டு, சந்திரன் நின்ற இடத்தில இருந்து எண்ண கிடைப்பது இந்து லக்னம் ஆகும். 

இந்து லக்னத்தில் இயற்கை சுப கிரகங்கள் அமர்வது சிறப்பு. 

இந்து லக்னத்தின் பலன்
=======================

இந்து லக்னத்தில் இருக்கும் கிரகம், அதன் திசை மற்றும் புத்தியில், ஜாதகரை புகழ், பணம், அந்தஸ்து என உயர்வடைய வைக்கும். 

இந்த இடத்தை மகாகவி காளிதாசர் வெறும் "இந்து ராசி" என்று சொல்லி இருக்கலாம். ஆனால் இந்து லக்னம் என சொல்வதில் பொருள் இருக்கிறது. ஆதாவது இந்து லக்னத்தில் கிரகங்கள் இல்லையெனில், இந்து லக்னத்தில் இருந்து எண்ண வரும் முதல் கேந்திரத்தில் இருக்கும் கிரகம், அதாவது இந்து லக்னத்தில் இருந்து 4 அல்லது, 7 அல்லது 10 இடத்தில் இருக்கும் கிரகம் கணக்கில் கொள்ளவேண்டும். அந்த கிரகம் இந்து லக்னத்தில் இருப்பது போல் பலன்களை அதன் திசையில் தரும். 

உதாரணமாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜாதகம் பார்க்கலாம்.

http://aadhiguru.com

அவரது ஜென்ம லக்னம் சிம்மம், அதில் இருந்து ஒன்பதாம் இடம் "மேஷம்". மேஷ ராசியின் அதிபதி "செவ்வாய்". அவரின் எண் - 6 (மேலே கொடுக்கப்பட்ட எண்களை பார்க்கவும்)

அவரது ராசி மகரம், அதில் இருந்து ஒன்பதாம் இடம் கன்னி. கன்னி ராசியின் அதிபதி புதன். புதன் எண் = 8.

இரண்டையும் கூட்ட 8 + 6 = 14. கூடிவந்த எண் 12 என்ற எண்ணை விட அதிகம் என்பதால், அதை 12 ஆல் வகுக்க வேண்டும். 14/12 = 1 ஈவு, 2 மீதி. 

மீதி 2 என்பதால். அவரது மகர ராசியில் இருந்து இரண்டு எண்ண, கிடைப்பது கும்பம் ஆகும். எனவே கும்பமே இவரது இந்து லக்னம் ஆகும்.

இந்து லக்னத்தில் இருக்கும் கிரகங்கள் அபிரிமிதமான பலன்களை தனது திசை புத்தியில் செய்யும், ரஜினிகாந்த் அவர்கள் தனது குரு திசையில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்தார். பணம், புகழ், அந்தஸ்து என எல்லாம் கிடைத்தது.

அவரவர் ஜாதகத்தின் கணித்ததை சுயமாக கணித்து கொள்ளவும்.http://aadhiguru.com

Comments

Add new comment