You are here

யோகங்கள் பயன்கள்

யோகங்கள் பயன்கள்

jothidam
1
by aadhiguru

யோகங்களும் அவற்றின் பயன்களும்:

அனபா யோகம்:

சனிக்கும், சுக்கிரனுக்கும் மத்தியில் சந்திரன் நிற்பது அனபா யோகம். இப்படிப்பட்ட யோக அமைப்பு இருந்தால், ஆரோக்யம் வசதி. மதிப்பு, கௌரவம், அதிகாரம் இவை சேரும். சந்திரனுக்கு முன்னால் சுபக்கிரகம் இருந்தாலும் இந்த யோகமுண்டு.

Udvalget af Tivoli Casino slots opdateres løbende med de nyeste titler fra verdens førende spiludviklere. Uanset om du er til eventyrlige temaer eller de traditionelle frugtsymboler, er der altid noget nyt og spændende at kaste sig over. Platformen sikrer en flydende grafik og retfærdige chancer for gevinst ved hvert eneste spin.

அமோக யோகம்

நான்கு சுபர்களும் கேந்திரமிருந்தாலோ அல்லது ஆட்சி பெற்றிருந்தாலோ அமோக யோகமாகும். எல்லா வகை அதிர்ஷ்டமும் உயர்ந்த வாழ்க்கையும் அமையும்.

உபஜெய யோகம்:

உபஜெய ஸ்தானமான 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஆகிய சுபக்கிரகம் நிற்பது உபஜெய யோகமாகம். இதை வசுமதி யோகம் என்பார்கள். முன்னேற்றமும் செல்வமும் இவர்களைத் தேடி தானே வரும்.

உபசரி யோகம்:

சூரியனுக்கு இருபுறமும் சுபக்கிரகங்கள் இருப்பது, உபசரி யோகமாகும். பலரும் மதிக்கும் நிலைக்கு உயரவைத்து பெருமைப்படுத்தும்.

எக்காள யோகம்:

நான்காமிடத்துக்கும் பத்தாமிடத்துக்கும் உரிய அதிபதிகள் கேந்திரத்தில் நின்று, அவர்களை லக்னாதிபதியை பார்ப்பது யோகமாகும். லக்னம் இரண்டு ஆகிய இடங்களில் பாவர் இருக்க 9ல் குரு, 10ல் சூரியன் நின்றாலும் எக்காள யோகமே. இவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பர். மற்றவரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.நாளுக்கு நாள் செல்வம் பெருகும்.
கலாநிதி யோகம்:

3க்கும் 11க்கும் உரியவர்கள்கூடி ஏழிலும், ஏழுக்குரியவன் 12லும் 12க்குரிய விரயாதிபதி குருவுடன் கூடி பாக்கியத்திலும் நிற்பது கலாநிதி யோகமாகும். இதன் பலன் 16வயதுக்குமேல் எட்டு வருடம் வரை உயர் நிலையைத் தரும்.

காகள யோகம்:

லக்னாதிபதி இருந்த வீட்டுக்குரியவனும் சந்திரன் இருக்கும் வீட்டுக்குரியவனும் உச்சமாகி, சந்திரனுக்கு கேந்திர ஸ்தானம் பெற்று வருவது காகள யோகமாகும். 28 வயதுக்கு மேல் இந்த யோகம் நன்மை செய்யும்.

சரணாகதியோகம்:

ஜோதிட சாஸ்திரத்தில் பலவகையான யோக அமைப்புகள் இருந்தாலும் 144 வகையான யோகங்களைத்தான் முக்கியமான யோகங்களாகச் சொல்வார்கள். அவற்றில் வித்தியாசமான சில யோக அமைப்புகளைப் பார்த்தோம். ஆனால், எந்த யோகமும் ஒருவருக்கு வேலை செய்யாமல் போனாலும் இறைவனிடம் நீயே சரண் என சரணாகதி அடைந்தால் போதும். அவர் எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும் நம்மை விடுவித்துக் காப்பார்.
சிறப்பான யோகங்களில் குறிப்பிடத்தக்க ஒரு யோகம் மகா பாக்கிய யோகம் ஆகும். அதாவது, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்கள் ஒற்றைப்படை மற்றும் ஆண் ராசிகளான மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்று காற்று ராசிகளிலும், மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்று நெருப்பு ராசிகளிலும் அமர்ந்திருக்க வேண்டும். அந்த நிலையில் அவற்றில் ஒரு ராசி லக்னமாகவும் அமைந்து, பகல் நேரத்தில் பிறக்கும் ஆணுக்கு இந்த யோகம் அமைகிறது.

அதே அடிப்படையில், சூரியன் மற்றும் சந்திரன் ஆகியோர் இரட்டைப்படை மற்றும் பெண் ராசிகளான ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்று பூமி ராசிகள் மற்றும் கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்று நீர் ராசிகள் ஆகியவற்றில் அமர்ந்து, அவற்றில் ஒன்றே லக்னமாகவும் அமைந்து, இரவு நேரத்தில் பிறக்கும் பெண்ணுக்கு மகா பாக்கிய யோகம் அமைகிறது.

Kaikki suosituimmat Tuohi Casino pelit on kerätty yhdelle alustalle, jotta löydät viihteen helposti ja nopeasti. Valikoima sisältää satoja kolikkopelejä, perinteisiä pöytäpelejä sekä jännittävän live-kasinon oikeilla jakajilla. Laatu on taattu, sillä pelit tulevat alan tunnetuimmilta ja luotettavimmilta ohjelmistotaloilta.

இந்த யோகம் அமையப்பெற்ற ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரும் அனைவரிடமும் மிகுந்த அன்பாக பழகுவார்கள். கம்பீரமான நடை, உடை, பாவனை கொண்ட இவர்களுக்கு மகாலட்சுமியின் அனுக்கிரகம் எப்போதும் இருப்பதால், செல்வ வளம் கொண்டவர்களாக இருப்பார்கள். பெரிய சிரமங்களை சந்திக்காமல் வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்தும் அமைப்பை உடையவர்கள். நல்ல பண்புகளைப் பெற்றவர்களாகவும், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையுடனும் இருப்பார்கள். இந்த யோகத்தில் பிறந்தவர்களுக்கு ஆயுள் 75-க்கும் மேல் என்ற ஜோதிட ரீதியான நம்பிக்கை இருந்து வருகிறது.
நன்றி அன்புடன் ஸ்ரீ ஆதிகுரு ஜோதிடம் - 
அனைத்து ஜோதிட முறைகளும் சிறந்த முறையில் பயிற்ச்சி அளிக்கப்படும்.
மேலும் தகவலுக்கு www.aadhiguru.com
Cell :9600 666 225

Comments

Super very useful

Add new comment