You are here

கிரகங்களின் அரோகணம் /அவரோகணம்.

கிரகங்களின் அரோகணம் /அவரோகணம்.

jothidam
0
by aadhiguru

ஆரோகண கதி அவரோகண கதி:
எப்போது சட்பலம் பெற்ற கிரகம் அதிகமான யோகத்தை தரும்?
ஆரோகண கதியில் தரும்.

ஒரு கிரகம் தனது உச்ச பாகையில் இருந்து நீச பாகையை நோக்கி சென்றால் அவரோகண கதியென்று பெயர்.
அது பலவீனமான பலன்களையே தரும்.

ஒரு கிரகம் தனது நீசபாகையிலிருந்து உச்ச பாகையை நோக்கி சென்றால் ஆரோகண கதியென்று பெயர்.
அந்த கிரகம் தனது தசாவில் யோகபலன்களை அதிக அளவில் தரும்.

ஒரு கிரகம் ஒரு கிரகம் ராசியிலும் அம்சத்திலும் வலுபெற்று ஆரோகண கதியில் சென்றால் அந்த தசாவிற்கு உத்தம தசா என்று பெயர்.
அது நல்ல யோகபலன்களை தரும்.

ஒரு கிரகம் ராசியில் வலுபெற்று அம்சத்தில் நீசம் அல்லது பகை பெற்று அவரோக கதியில் சென்றால் அத்தசாவிற்கு அதம தசாவென்று பெயர். ராசியிலும் பலவீனமானால் கடுமையான தீய பலன்களை தரும்.

அதாவது தீயபலன் தரும்.

ராசியிலோ அம்சத்திலோ பலவீனமானாலும் ஆரோகண கதியில் உள்ள கிரகம் மத்திம பலனை தரும்.

ஒரு கிரகம் உச்ச பாகையை கடந்த பிறகு பலவீனத்தை நோக்கி செல்கிறது.

சட்பலத்தில் வலுவடைந்த கிரகங்கள் பத்து ரூபத்திற்கு மேல் இருந்தால் நல்ல பலன்களை தரும். அது ஆரோகண கதியில் இருந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை, செல்வம், பதவி ,விருப்பங்கள் நிறைவேறுதல் போன்ற பலன்களை மிக அதிகமாக தரும்.

ஐந்து ரூபத்திற்கு அதிகமாக இருந்து ஆரோகண கதியில் உள்ள கிரகம் பத்து ரூப வலிமையை பெற்று அவரோகண கதியில் செல்லும் தசாவை விட அதிகமான யோகபலன்களை தரும்.
இது மிகமிக முக்கியமான விதி.

நல்ல யோக கிரகங்கள் சட்பலமடைவது நல்லது. 6,8,12 ஆம் அதிபதிகள் சட்பல வலிமை அதிகமாக அடைந்தால் தனது காரக ரீதியில் நல்ல பலன்களையும் ஆதிபத்திய ரீதியில் கெடுபலன்களையும் தரும்.

6,8,12 ல் இருந்தாலும் சட்பல வலுவடைந்து நீசத்தைவிட்டு உச்சத்திற்கு செல்லும் கிரக தசா யோகபலன்களையே தரும்.

ஆரௌகணம் என்றால் ஏறுமுகம் அவரோகண கதியென்றால் இறங்குமுகம் என்று பொருள்.

உச்ச பாகையில் உள்ள கிரகம் ஒரு ரூபம் அதாவது 100 மதிப்பெண் வலு வென்றால் நீச பாகையில. உள்ள கிரகம் 0 மதிப்பெண். இதை உச்ச பாகையிலிருந்து நீசபாகைக்கு இடைப்பட்ட பாகை அளவான 180 பாகையில் எத்தனையாவது பாகையில் உள்ளதென்பதை ரூப மதிப்பெண்ணாண 100 உடன் பின்ன அடிப்படையில் வகுத்தால் உச்சபலம் கிடைக்கும். இது சட்பலத்தில் ஒன்றான ஸ்தான பலத்தின் ஒரு அங்கமான உச்சபல மதிப்பாகும்.

ஆனால்..

இந்த ஆரோகண ,அவரோகண கதியென்ற உச்சத்தை விட்டு நீசத்திற்கு செல்லுதல் , நீசத்திலிருந்து உச்சத்தை நோக்கி செல்லுதல் போன்றவை வேறு என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

அதாவது உச்ச பாகையை கழிந்து நீசத்தை நோக்கி புறப்பட்ட கிரகமானது பலவீனமான பலன்களை அதாவது எதிர்மை பலன்களை தரும். அதாவது யோகபலன்களை குறையும்.
அது உச்ச பாகைக்கு அருகில் இருந்தாலும் சரி.

உச்ச பாகையை கழிந்து நீசத்தை நோக்கி செல்லும் கிரகம் உச்ச மதிப்பில் 95 மதிப்பெண் பெற்று சட்பலத்தை கூட்டிக்கொண்டாலும் அவரோகண தசாதான் என்பதை தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும்.

அவரோக கதியிலோ, ஆரோகண கதியிலோ உள்ள ஒவ்வொரு பாகையும் முக்கியத்துவம் பெறுகிறது.

ஆரோகண கதியில் உள்ள கிரக தசாவானது வளர்பிறை சந்திரனை போல தினமும் யோகபலன்களை தசா முழுவதும் அதிகரித்துக்கொண்டே செல்லும்.

கன்னியில் உச்ச பாகையை கடந்து 16 வது பாகையில் உள்ள புதனை விட மிதுனத்தில் உச்சத்தை நோக்கி செல்லும் புதன் தசா யோகத்தை அதிகம் தரும்.
அதேப்போன்று மீனத்தில் நீசபாகையான 15 வது பாகையை கடந்த புதன் தசாவானது ஆரோகண கிரக தசா என்பதால் நல்ல பலன்களை தசாக்காலம் செல்ல செல்ல விருத்தியாக தரும்.

நன்றி அன்புடன்

ஸ்ரீ ஆதி குரு ஜோதிட ஆராய்ச்சி மையம் எசன்னை.9600 666 225- aadhiguru.com

Comments

Add new comment