You are here

லக்னமும் நட்சதிரமும்

லக்னமும் நட்சதிரமும்

jothidam
0
by karunagaran

ஜோதிட கலையில் லக்னம் என்னும் உயிர் ஸ்தானத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உடல் ஸ்தானமாக கருதப்படும் சந்திரன் நின்ற வீட்டிற்கு இரண்டாவது பட்சமாக முக்கியத்துவம் கொடுக்கபட்டு அவர் அவர்கள் பலாபலன்கள் பார்க்கப்பட்டும் சொல்லப்பட்டும் வருகிறது. இது இப்படி இருக்க சத்தியரிஷி, அத்திரி, சட்டமுனிவர் போன்றோர் கருத்துப்படி நட்சத்திர சாரகதிப்படி பலன்களை காணும் போது அப்பலன்கள் நடைமுறைக்கு ஏற்க்குறைய ஒத்து வருவதை காணலாம் அதனால் தான் சாரம் அறியாதவன் நூலை அறியான் என சொல்ல பட்டதோ என்னவோ?
http://www.aadhiguru.com
 நட்த்திர சாரயியல் கணிதப்படி பார்க்கும் போது லக்னம் அமைந்த நட்சத்திரம் அதன் அதிபதி ஆட்சி உச்சம் நட்பு பலம் பெற்று 3.6.8.12ல் இல்லாமல் சூன்ய தன்மை பாதக தன்மை பெறாமல் இருக்க வேண்டும். இதே போல் சந்திரன் நின்ற நட்சத்திர அதிபதியை பார்க்க வேண்டும். இதில் எது அதிக பலத்துடன் காணப்படுகிறதோ அதையே லக்னமாக பாவித்து பலன்களை சொல்ல வேண்டும். பிறந்த நட்சத்திரம் எதுவோ அதற்கு 3.5.7வதாக வரும் நட்சத்திரங்களில் நிற்கும் கிரக திசையானது எந்த லக்னத்தில் பிறந்தவர்கள் ஆனாலும் அவ்வப்போது பாதிப்பை தராமல் இருக்காது. 1.9வது நட்சத்திரம் நின்ற கிரக திசைகள் புத்தி அந்தரம் மத்திம பலனை தரும் நன்மை தீமை கலந்து நடக்கும்.
http://www.aadhiguru.com
 திசா நாதன் சூரியனாகி அவர் நின்ற நட்சத்திரத்தில் இருந்து 22வது நட்சத்திரம் பிறந்த நட்சத்திரமாக வந்தால் சூரிய திசை பலன்கள் “அவுட்”. இதே போல் சந்திரனுக்கு 7வது நட்சத்திரம், புதனுக்கு 22வது நட்சத்திரம் செவ்வாய்க்கு 3வது நட்சத்திரம், குருவிற்கு 6வது நட்சத்திரம், சுக்கிரனுக்கு 24வது நட்சத்திரம், சனிக்கு 8வது நட்சத்திரம், ராகு, கேதுவுக்கு 20வது நட்சத்திரம் பிறந்த நட்சத்திரமாக வந்து அவர் அவர்கள் திசா புத்தி நடந்தால் நல்ல பலன்களை யார் சொன்னாலும் நம்பாதீர��
http://www.aadhiguru.com

ரஜ்ஜி பொறுத்தம் .

கேது-புதன் நட்சத்திரங்கள் ...கால்/.பாதம்
சுக்கிரன் -சனி நட்சத்திரங்கள்..ஊரு/தொடை
சூரியன்-குரு நட்சத்திரங்கள்....-நாபி/வயிறு
சந்திரன்-ராகு நட்சத்திரங்கள்..கண்டம்/கழுத்து
செவ்வாய் நட்சத்திரங்கள்...சிரசு/தலை

கேதுவின் தீவிரம் புதனுக்கு பிடிக்காது
புதனின் சாமர்த்தியம் கேதுவுக்கு பிடிக்காது.

சுக்கிரனின் தூய்மை சனிக்கு ஒத்து வராது
சனியின் அழுக்கு சுக்கிரனுக்கு பிடிக்காது

சந்திரனின் கருணை பாசம் ராகுவுக்கு பிடிக்காது
ராகுவின் தில்லுமுல்லு சந்திரனுக்கு பிடிக்காது.

சூரியனின் அதிகாரம் குருவுக்கு பிடிக்காது
குருவின் அறிவுரை சூரியனுக்கு பிடிக்காது்.

செவ்வாயின் விவேகமற்ற வேகம்/கோபம் ஒன்றுக்கொன்று பிடிக்காது.

இந்த நட்சத்திரக்கார்ர்களை திருமண உறவாக/தொழில் பங்காளிகளாக /நண்பர்களாக சேர்த்து வைக்க ஒத்து  வரமாட்டார்கள்

Comments

Add new comment