You are here

திதிகளின் பலன்கள்

திதிகளின் பலன்கள்

jothidam
0
by karunagaran

திதிகளின் பலன்கள்.

திதி என்ற சொல்லுக்கு தொலைவு என்பது பொருள் ஆகும். அதேபோல் திதி என்பது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். சந்திரன் வளர்வதும், தேய்வதுமாக இருப்பதால் இருவகையான திதிகள் இருக்கின்றன. ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. இதில் இரண்டு பட்சங்கள் உள்ளன. அவை கிருஷ்ண பட்சம் அல்லது தேய்பிறை மற்றும் சுக்கில பட்சம் அல்லது வளர்பிறை ஆகும்.வளர்பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும், தேய்பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும் வருகின்றன. இந்தப் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அமாவாசையும்,பௌர்ணமியும் மாதமொரு முறை மாறி மாறி வந்து போகின்றன.

வளர்பிறை திதிகள்(சுக்கில பட்சம்):-

  • அமாவாசை
  1. பிரதமை
  2. துவிதியைதுவிதியை(இரண்டாம் நாள்)
  3. திருதியை (மூன்றாம் நாள்)
  4. சதுர்த்தி(நான்காம் நாள்)
  5. பஞ்சமி (ஐந்தாம் நாள்)
  6. சஷ்டி (ஆறாம் நாள்)
  7. சப்தமி(ஏழாம் நாள்)
  8. அஷ்டமி(எட்டாம் நாள்)
  9. நவமி (ஒன்பதாம் நாள்)
  10. தசமி (பத்தாம் நாள்)
  11. ஏகாதசி (பதினொன்றாம் நாள்)
  12. துவாதசி(பனிரெண்டாம் நாள்)
  13. திரயோதசி(பதின்மூன்றாம் நாள்)
  14. சதுர்த்தசி(பதினான்காம் நாள்)

தேய்பிறை திதிகள் (கிருஷ்ண பட்சம்):-

  • பௌர்ணமி 
  1. பிரதமை
  2. துவிதியைதுவிதியை(இரண்டாம் நாள்)
  3. திருதியை (மூன்றாம் நாள்)
  4. சதுர்த்தி(நான்காம் நாள்)
  5. பஞ்சமி (ஐந்தாம் நாள்)
  6. சஷ்டி (ஆறாம் நாள்)
  7. சப்தமி(ஏழாம் நாள்)
  8. அஷ்டமி(எட்டாம் நாள்)
  9. நவமி (ஒன்பதாம் நாள்)
  10. தசமி (பத்தாம் நாள்)
  11. ஏகாதசி (பதினொன்றாம் நாள்)
  12. துவாதசி(பனிரெண்டாம் நாள்)
  13. திரயோதசி(பதின்மூன்றாம் நாள்)
  14. சதுர்த்தசி(பதினான்காம் நாள்)

 

இப்படி வரும் திதிகளின் பிறந்த பலன்களை அறிந்துக் கொள்வோம்:-

  • பிரதமையில் பிறந்தவர்கள், எதையும் ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கும் ஆற்றல் உடையவர்கள்.
  • துவிதியையில் பிறந்தவர்கள்,  உண்மையை பேசுபவர்கள். பொய் பேச மாட்டார்கள்.
  • திருதியையில் பிறந்தவர்கள், தான் நினைக்கும் காரியத்தை செய்து முடிப்பவர்கள்.
  • சதுர்த்தியில் பிறந்தவர்கள், மந்திர சக்தியில் விருப்பம் உடையவர்கள்.
  • பஞ்சமியில் பிறந்தவர்கள், பொன் ஆசை உடையவர்கள்.
  • சஷடியில் பிறந்தவர்கள், செல்வர் ஆக விருப்பப்படுவார்கள்.
  • சப்தமியில் பிறந்தவர்கள், மற்றவர்களின் மேல் இரக்கம் குணம் உடையவர்கள்.
  • அஷ;டமியில் பிறந்தவர்கள், குழந்தைகளிள் மேல் மிகவும் அன்பு உடையவர்கள்.
  •  நவமியில் பிறந்தவர்கள், அதிக புகழ் பெறுவதில் நாட்டம் உடையவர்கள்.
  • தசமியில் பிறந்தவர்கள், ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக விளங்குவார்கள்.
  • ஏகாதசியில் பிறந்தவர்கள், பொருள்  புதுமையான தொழில்களில் செய்வதில் அதிக ஆர்வம் உடையவர்கள்.
  • திரயோதசியில் பிறந்தவர்கள்,  உறவினர்களிடம் அதிகம் பேச மாட்டார்கள்.
  • பௌர்ணமியில் பிறந்தவர்கள், தெளிவான சிந்தனை உடையவர்கள்.
  • அமாவாசையில் பிறந்தவர்கள், தன் அறிவை மேலும் பெருக்கிக்கொள்வதிலேயே ஆர்வம் உடையவர்களாக இருப்பர்.

திதி சூன்யம் என்றால் என்ன?

  • வேத ஜோதிடத்தில் ஒரு விதி கோட்பாட்டைக் கொண்டு பயணம் செய்யக்கூடாது பல விதிகளுடன் கூடிய  சூட்சமங்கள் உள்ளடங்கியுள்ளது. மேலோட்டமாக பார்த்தால் ஜாதகருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் உச்சம் அடைந்திருக்கும். ஆனால், உச்ச பலனைப் பெற்றிருக்காது ஒருவித நீச்ச பலனை பெற்றிருக்கும். அதற்குப் பல காரணிகள் இருக்கலாம். ஆனால் அவற்றில் ஒன்றான திதி, சூன்யம் என்பது ஒரு சூட்சம விதி. நம்முடைய கணக்குபடி சூன்யம் என்றால் பூச்சியம் (zero) அதாவது வெறுமை என்று அர்த்தம். அதன்படி எல்லா திதிகளும் யோகம் இல்லாமல் அங்குள்ள பாவம் யோகம் பங்கமாகச் செயல்படும்.
  • சூரியன் சந்திரன் படி திதிகள் பதினைந்தாக உருவாக்கப்பட்டது என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவற்றில் பிரதமை முதல் திரயோதசி வரை 13 திதிகள் இரண்டு இரண்டு ராசிகளில் சூனியம் அடைகிறது. அவற்றில் சதுர்த்தசி திதி மட்டும் நான்கு ராசிகள் சூனியம் அடைகிறது. சூனியம் அடைந்து பாவங்கள் மற்றும் சூனிய அதிபதிகள் ஒட்டுமொத்த சக்தியும் (Power) இழந்துவிடும் என்பது அர்த்தம். அதற்கும் நேர்மறை மற்றும் எதிர்மறை (Positive & negative) பக்கங்களைப் பார்ப்போம்.

திதி சூனியம் விதி:-

  • லக்கினாதிபதியே சூனிய ராசியில் அமர்ந்தால் மிகவும் கெடுபலன்கள் ஜாதகருக்கு ஏற்படும். எடுத்துக்காட்டாக பிரதமை திதியில் பிறந்தவருக்கு சூனிய வீடு என்பது மகரம் மற்றும் துலாம் அவற்றின் சூனிய அதிபதிகள் சனி மற்றும் சுக்கிரன் ஆவார். ஜாதகர் மகர லக்கினமாக, சனி லக்கினத்தில் இருந்தால் ஜாதகருக்கு முதல் பாவம் கெட்டுவிடும் லக்கினாதிபதி மற்றும் சூனிய அதிபதியான சனி ஜாதகரை ஒரு ஆட்டு ஆட்டுவிப்பர். அவருக்கு வாழ்க்கை முழுவதும் பிரச்னைகள் ஏற்படும் என்பது ஒரு விதி.
  • திதி சூன்ய கிரகங்கள் ஆட்சி, உச்சம், கேந்திர, திரிகோணமாக அமைந்தாலும் நல்ல பலனை அளிக்கும் என்று தப்புக் கணக்குப் போடக்கூடாது. திதி சூனியம் பெற்ற ராசிகள் மற்றும் அங்கு அமர்ந்த சுபக்கிரகங்கள் மற்றும் யோகர்கள் கெட்ட பலன்களைத்தான் தருவார்கள்.
  • ஒருவரது லக்கினாதிபதி யோகராக இருந்தாலும் முக்கியமாக அவர் நல்ல பாவங்கள் என்று கூறும் 1, 2, 4, 5, 7, 9, 10, 11-ல் அமர்ந்துவிட்டால் அவர் அவயோகரா பலம் இழந்து செயல்படுவார். எடுத்துக்காட்டாக 2, 7-ம் பாவம் திதி சூனியம் பெற்றால் குடும்ப வாழ்க்கை, தனம், கூட்டு வியாபாரம் அனைத்தும் பிரச்னையில் முடியும்.
  • திதி சூன்யம் பெற்ற கிரகங்கள் அதன் உண்மையான காரக பலத்தை இழந்துவிடும். எடுத்துக்காட்டாகப் புதன் சூனியம் பெற்றால் அறிவு கெட்டுப் படிப்பில் தடை, தொழிலில் சிந்தித்துச் செயல்படும் தன்மை அற்றவனாகச் செயல்படுவான்.
  • திதி சூன்யம் பெறும் ராசிகளின் சந்திரன் சஞ்சரிக்கும் பொழுதும், திதி சூன்ய ராசி லக்னமாக நடைபெறும் சமயத்திலும், சுப காரியங்கள் செய்யலாகாது.
  • திதி சூனியம் எப்பொழுது எதிர்மறையாக வேலை செய்து நன்மைகள் ஏற்படுத்தும் என்று பார்ப்போம் ( minus x minus = Plus positive) ஒருவர் ஜாதகத்தில் அவயோகர் என்பவர் திதி சூனியம் ராசியில் அமர்ந்துவிட்டால் அவர் யோகராக மாறிவிடுவார். இதில் கெட்டவன் கெட்டிடில், கிட்டிடும் அதியோகம் என்ற கோட்பாடு செயல்படும்.
  • ஜனனமாகும் குழந்தை, அமாவாசை அல்லது பௌர்ணமியன்று பிறந்தால், அந்த ஜாதகம் திதி சூன்யம் அடையாத ஜாதகமாக மாறிவிடும்.
  • திதி சூன்யம் அடைந்த கிரகங்கள் மறைவு ஸ்தானமாகிய 3,6-8-12-ல் அமர்ந்தால் ஜாதகருக்கு அந்த கிரகம் அதிக பலம் பெற்றுச் செயல்படும். திதி சூனியம் அடைந்த அந்த  கிரகங்கள் நீச்சமோ, பாவிகளோடு இணைத்தோ, வக்ரமோ அடைந்தால் அவற்றின் கிரக மற்றும் பாவகராகப் பலன்கள் அதிகமாகவே நற்பலன்கள் கிட்டும்.
  • ஜனன ஜாதகத்தில் முதலில் ஜாதகர் எந்த திதியில் பிறந்திருக்கிறார், அந்த திதி எந்தெந்த ராசி சூனியம் அடையச்செய்கிறது, அங்கு அமர்ந்த கிரகங்கள் என்னென்ன? அவர்கள் யோகரா அவயோகரா, திதி சூனிய அதிபதிகள் எங்கெங்கு அமர்ந்து பலத்தை இழக்கச் செய்கிறார்கள் என்று வரிசைப்படுத்திப் பார்க்க வேண்டும்.
  • திதி சூன்ய கிரகங்கள் பலம் பெற அந்தந்த திதிக்குரிய கடவுளை வழிபட்டு தோஷ நிவர்த்தி அடையாளம்.

திதியை சூனியமாக்கும் ராசிகள் அதன் அதிபதிகள் யார் யார்?

ஜனன ஜாதகத்தில் பிறந்த அனைவருக்கும் ஒரு யோக திதி அமைந்திருக்கும். அந்த யோக திதிகள் எந்தெந்த ராசியில் எந்தெந்த அதிபதிகள் திதி சூனிய அடையும் என்பதைக் கீழே பார்ப்போம்.

        திதிகள்                            சூனிய ராசிகள்                      சூனிய ராசிகள் அதிபதிகள் 

  1. பிரதமை                        துலாம்-மகரம்                          சுக்கிரன்-சனி
  2. துதியை                         தனுசு-மீனம்                              குரு 
  3. திருதியை                     மகரம்-சிம்மம்                          சனி-சூரியன்
  4. சதுர்த்தி                         கும்பம்-ரிஷபம்                        சனி-சுக்கிரன்
  5. பஞ்சமி                           மிதுனம்-கன்னி                        புதன்
  6. சஷ்டி                              மேஷம்-சிம்மம்                        செவ்-சூரியன்       
  7. ஸப்தமி                          தனுசு-கடகம்                             குரு-சந்திரன்    
  8. அஷ்டமி                         மிதுனம்-கன்னி                        புதன்
  9. நவமி                               சிம்மம்-விருச்சிகம்                 சூரியன்-செவ்வாய்
  10. தசமி                                சிம்மம்-விருச்சிகம்                 சூரியன்-செவ்வாய்      
  11. ஏகாதசி                           தனுசு-மீனம்                              குரு       
  12. துவாதசி                         துலாம்-மகரம்                            சுக்கிரன்-சனி       
  13. திரயோதசி                    ரிஷபம்-சிம்மம்                        சுக்கிரன்-சூரியன்
  14. சதுர்த்தசி                       மிதுனம்-கன்னி,                        புதன்-குரு        

                                                      தனுசு-மீனம்

Comments

Add new comment