You are here

சப்தம நண்பர்கள்...

சப்தம நண்பர்கள்...

ஆன்மிகம்
0
by aadhiguru

சப்தம நண்பர்கள்:-
 

இவ்வுலகில் மனிதர்களுக்கு  7 - விதமான நண்பர்கள் உண்டு:-

1) வசிய மித்ரன், 

2) அத்வைத மித்ரன், 

3) லகுத மித்ரன், 

4) துர்வ மித்ரன், 

5) பித்ரு பித்ரக மித்ரன், 

6) உபயபாவி மித்ரன், 

7) உதாசின மித்ரன். 

வசியமித்ரன்:-
தனக்கு இலாபம் கிடைக்கும் வரை சுயநலத்தோடு பழகுபவன்.

அத்வைத மித்ரன்:-

நல்ல காலத்திலும், தீய காலத்திலும் தொடர்ந்து நண்பனாக இருப்பான். 

லகுத மித்ரன் :-

நெருங்கிப் பழகமாட்டான். ஆனால் உதவிகள் செய்யத் தயாராக இருப்பான்.

துர்வ மித்ரன்:

அனேக நண்பர்கள் இல்லாதவன்.

பித்ரு பித்ரக மித்ரன் :- 

சொந்த பந்தத்தில் வரும் நண்பர்கள்.

உபய பாவி மித்ரன் :- 

நண்பன் எதிரி என்று பாராமல் எல்லோருக்கும் உதவுபவன்.

உதாசின மித்ரன் :-

நண்பனோ, எதிரியோ யாருக்குமே உதவி செய்யாதவன்.இவர்களில் சிலரின் நட்பு நல்லதாகவும்,

சிலரின் நட்பு தீயதாகவும் காணப்படலாம். ஆனால் வேத உபதேசத்தின்படி இவர்களில் யாருமே உண்மையான

நண்பன் கிடையாது. ஆண்டவனைத் தவிர. காரணம், மனித வாழ்வில் தவிர்க்க முடியா ஆபத்து(மரணம்) வரும் போது 

இவர்களில் யாருமே நம்முடன் சேர்ந்து வருவது கிடையாது.

தனம் ச பௌமம்,பசுவே ஈ கோஸ்தல்

விஹாரிய சாத் துவாரம், சயனம்

சம்ஸ்தம்மே

தேகா சித்தா, தர்மம் ஏகோ கோ

கோச்சரம்

 நாம் மரணம் அடைந்த பிறகு, நம்மால் மண்ணில் புதைத்து வைத்து காக்கப்பட்ட பணம், புதைக்கப்பட்ட

மண்ணில் தான்இருக்கும்.

கொட்டகையில் கட்டப்பட் மாடகொட்டகையில்தான் இருக்கும்.நம்முடைய மனைவியோ வீட்டு வாசல்வரை வரமுடியும்.

பிள்ளைகளும் நண்பர்களும், சொந்த பந்தங்களும் சுடுகாடுவரை வரமுடியும். நம்முடைய இந்த மனித உடலோ 

எரிந்து சாம்பலாகிவிடும். அதன்பின் நம்முடன் தொடர்ந்து வரப்போவது யார்....? நாம் செய்த தர்மம் ஒன்றுதான்,

மரணத்திற்குப் பின்பும் நம்முடன் தொடர்ந்துவரும். (நீதி சாஸ்திரம்)

தர்மத்திற்கு நான்கு கால்கள் உண்டு:-

(கருணை , சத்யம் , தபம் , தூய்மை)

1) கருணை:-

பிற ஜீவன்களை இம்சிக்காமல் இருப்பதால் கருணை காக்கப்படுகிறது.

2) சத்யம்:-

சூதாட்டம் இல்லாமல் இருந்தால் சத்யம் காக்கப்படும்.

3) தபம்:-

மது மற்றும் போதை வஸ்துக்கள்இல்லாமல் இருந்தால் தபம் காக்கப்படும்.

4) தூய்மை:-

திருமணத்திற்கு புறம்பான தேவையில்லாத உறவு தவிர்க்கப்பட்டால் தூய்மை காக்கப்படும்.

சத்ய யுகத்தில்:- 

100% தர்மத்தை மக்கள் கடைப்பிடித்ததால் 100000 வயது வரை வாழ்ந்தனர். 

த்ரேதா யுகத்தில்:- 

75% தர்மத்தை மக்கள் கடைப்பிடித்ததால்10000 வயது வரை வாழ்ந்தனர். 

துவாபர யுகத்தில்:-

50% தர்மத்தை மக்கள் கடைப்பிடித்ததால் 1000 வயது வரை வாழ்ந்தனர்.

கலியுகத்தில்:- 

25% தர்மம் உள்ளது. மக்களின் ஆயுட்காலமும் 100 வருடத்திலிருந்து குறைந்து வருகிறது. 

வழக்கு விசாரணையில் தர்மம் நசுக்கப்படுமானால் அதனால் ஏற்படும் பாபம் நான்கு வகை.

எல்லா நண்பர்களிலும் மிகச்சிறந்த நண்பன் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மட்டுமேஏனெனில்

அவரின் சிறு அம்சம்ஜீவாதமாகளாகிய நாம் அனைவரும் பகவத் கீதை  உண்மையுருவில் 15.17 

மமைவாம்ஷோ ஜீவ-லோகே 

ஜீவ-பூத: ஸனாதன:

மன:-ஷஷ்டானீந்த்ரியாணி

ப்ரக்ருதி-ஸ்தானி கர்ஷதி

மொழிபெயர்ப்பு:-

இந்தக் கட்டுண்ட உலகில் இருக்கும் ஜீவாத்மாக்கள் எல்லாரும் எனது நித்தியமான அம்சங்களாவர்.

கட்டுண்ட வாழ்வின் காரணத்தால், மனம் உட்பட ஆறு புலன்களுடன் இவர்கள் மிகவும்கடினமாக

சிரமப்படுகின்றனர்.ஜீவாத்மாக்கள்  எனது சிறுபகுதி தான்என பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார் 

ஏனெனில் எல்லோருடைய இதயத்திலும் பரம்மாத்மாவாக  இருப்பது பகவான் ஸ்ரீகிருஷ்ணரே 

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் நம்முடன் எல்லா பிறவிகளிலும்நம்முடனே பரமாத்மா ரூபத்தில்  வந்து இந்த ஜீவனுக்கு 

நல்ல அறிவுரைகளை வழங்குகிறார்

சைத்யகுருவாக பகவத் கீதை  உண்மையுருவில்  15.15

ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி

ஸன்னிவிஷ்டோ

மத்த: ஸ்ம்ருதிர் க்ஞானம் அபோஹனம் ச

வேதைஷ் ச ஸர்வைர் அஹம் ஏவ

 வேத்யோ

வேதாந்த-க்ருத் வேத-வித் ஏவ சாஹம்

மொழிபெயர்ப்பு: -

நான்(கிருஷ்ணர்) எல்லாருடைய இதயத்திலும் (பரமாத்மாவாக) வீற்றுள்ளேன்,(கிருஷ்ணரிடமிருந்தே ) 

என்னிடமிருந்தே ஞாபகசக்தியும்அறிவும் மறதியும் உண்டாகின்றன.எல்லா வேதங்களாலும் அறியப்பட

வேண்டியவன் (கிருஷ்ணரே ) நானே. உண்மையில், வேதாந்தத்தை தொகுத்தவனும் வேதங்களை

அறிபவனும்நானே(கிருஷ்ணரே )பகவத் கீதை  உண்மையுருவில்  5.29 கூறுகிறார் இந்த.

3 விசயங்களை ஏற்றவர்களுக்கு அமைதி கிடைக்கும் அமைதி கிடைத்தால் ஆனந்தம் தானாகவே வந்துவிடும் 

பகவான் ஸ்ரீகிருஷ்ணரே அனைத்து ஜீவராசிகளுக்கும் உற்ற நண்பன்.

பகவத் கீதை  உண்மையுருவில் 5. 29

போக்தாரம் யக்ஞ-தபஸாம். ஸர்வ-லோக-

மஹேஷ்வரம்

ஸுஹ்ருத ம் ஸர்வ-பூதானாம்  க்ஞாத்வா

மாம் ஷாந்திம் ருச்சதி

மொழிபெயர்ப்பு:-

(பகவான் ஸ்ரீகிருஷ்ணராகிய)  

நானே, 

1.எல்லா யாகங்களையும்,தவங்களையும், இறுதியில் அனுபவிப்பவன் என்றும்,

 2.எல்லா லோகங்களையும்,தேவர்களையும், கட்டுப்படுத்துபவன்என்றும், 

3.எல்லா உயிர்வாழிகளின் உற்ற நண்பன்என்றும் அறிந்து,  

(பகவான் ஸ்ரீகிருஷ்ணரைப்) 

என்னைப் பற்றிய முழு உணர்வில் இருப்பவன், ஜடத்துயரங்களிலிருநது விடுபட்டு அமைதி அடைகிறான்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் ஆன்மிக ராஜ்ஜியமான கோலோக வ்ருந்தாவனம் /வைகுண்டம் 

இங்கு சென்றால் மீண்டும் இந்த ஜடவுலகில் பிறவி  எடுக்கமாட்டோம் 

பகவத் கீதை  உண்மையுருவில்  15.6

ந தத் பாஸயதே ஸூர்யோ

ந ஷஷாங்கொ ந பாவக:

யத் கத்வா ந நிவர்தந்தே

தத் தாம பரமம் மம

மொழிபெயர்ப்பு:- 

(பகவான் ஸ்ரீகிருஷ்ணரது ஆன்மிக உலகமான கோலோக வ்ருந்தாவனம் )

எனது அந்த பரம வாசஸ்தலம்சூரியனாலோ, சந்திரனாலோ,நெருப்பினாலோ, மின்சாரத்தினாலோ

ஒளியூட்டப்படுவது இல்லை. அதனை அடைபவர்கள் ஒருபோதும் இந்த ஜட உலகிற்குத் திரும்புவதில்லை.

ஹரே ராம ஹரே ராம 

ராம ராம ஹரே ஹரே

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ௐௐௐௐ

அன்பே சிவம்

http://aadhiguru.com/blog//general-astro1

Comments

Add new comment