You are here

சனி பகவானின் சில குறிப்புகள்

சனி பகவானின் சில குறிப்புகள்

jothidam
0
by aadhiguru

சனி பற்றிய சில குறிப்புகள் .

அன்புடன் ஸ்ரீ ஆதி குரு ஜோதிட ஆராய்ச்சி மையம்

www.aadhiguru.com

*ராஜ யோகத்தை அளிக்கும் சனீஸ்வரனுக்கு பிடித்த எளிய பரிகாரங்கள்*

ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்து விடுவார்.

அதே நேரத்தில் அதிபுத்திசாலி, பெரிய ராஜதந்திரியைக்கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார். ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவி இல்லாதவன் என்ற வித்தியாசம் எதுவும் சனி பகவானுக்கு கிடையாது. பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும்.

ஒருவருக்கு கெட்ட நேரம் வந்துவிட்டால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்து இருக்கும்.

அதே நேரத்தில் சனியால் யோக பலன்கள் அனுபவிக்க வேண்டும் என்று ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றல், வல்லமை சனி பகவானுக்கு உண்டு. ஆகையால்தான் ‘சனியைபோல் கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லை’ என்றும், ‘சனி கொடுத்தால் அதை யார் தடுப்பார்’ என்ற ஜோதிட சொற்றொடர்களும் ஏற்பட்டன.

*சிம்மாசனத்தை விட்ட தேவேந்திரன்*

ஒரு சமயம் தேவேந்திரன், சனி பகவானிடம் சென்று, ‘நான் தேவர்களுக்கெல்லாம் தலைவன். என்னை நீ எப்படி பிடிக்கலாம்?’ என்று கேட்டான். அதற்கு சனி பகவான், ‘நான் நீதிமான். எல்லோரையும் சமமாக பாவித்துத்தான் கிரக பரிபாலனம் செய்து வருகிறேன்.

www.aadhiguru.com

என் பார்வையில் இருந்து எவரும் தப்ப முடியாது’ என விளக்கம் சொன்னார். ‘அப்படியென்றால் நீ என்னை பிடிக்கும் நேரத்தையாவது சொல்லி விடு’ என்று தேவேந்திரன் வேண்டினான். சனீஸ்வரர் அந்த கால நேரத்தை தெரிவித்தார்.

சனீஸ்வரர் தெரிவித்த அந்த நேரம் வந்ததும் தேவேந்திரன் பெருச்சாளி உருக்கொண்டு சாக்கடையில் போய் ஒளிந்துகொண்டான். சனி குறிப்பிட்ட கால நேரம் கடந்த பிறகு வெளியே வந்த தேவேந்திரன், சனீஸ்வரரிடம் சென்று, ‘உங்கள் பார்வையில் இருந்து தப்பி விட்டேன் பார்த்தீர்களா’ என்று பெருமையடித்துக் கொண்டான்.

சனீஸ்வரர் சிரித்துக்கொண்டே, ‘நீங்கள் சிம்மாசனத்தை விட்டு சாக்கடையில் உழன்றீர்களே.. அதுகூட என் பார்வை, பீடிப்பினால்தான்’ என்றார். இதன்மூலம் சனீஸ்வரர் ஓர் சமத்துவ நாயகன் என்பதை அறிய முடிகிறது.

*உச்ச நேரம் ராஜ யோகத்தை அளிக்கும் சனிபகவான்*

எல்லா கிரகங்களுக்கும் ஜாதகத்தில் திசா, புக்தி, அந்தரம் என்று உண்டு. ஆனால் சனீஸ்வரருக்கு மட்டும் திசா புக்திகளுடன், கோச்சார பலமும் அதிகமாகும். ஒருவர் பிறந்த ராசிக்கு 12, 1, 2 ஆகிய வீடுகளில் சனிபகவான் வரும்போது ஏழரை சனி என்ற அமைப்பை ஏற்படுத்துகிறார்.

அதேபோல் ராசிக்கு நான்காம் வீட்டில் வரும்போது அர்த்தாஷ்டம சனியாக பலன் தருகிறார். ராசிக்கு ஏழாம் வீட்டில் வரும்போது கண்ட சனியாகவும் ராசிக்கு எட்டாம் வீட்டில் வரும்போது அஷ்டம சனியாகவும் பலன்களை தருகிறார்.

www.aadhiguru.com

நமக்கு குடும்பத்தில் கஷ்ட நஷ்டங்கள், உடல்நல குறைவு, விபத்துகள், வியாபாரத்தில், தொழிலில் கடன், நஷ்டம், ஏற்பட்டாலும் அலுவலகத்தில் ஏதாவது பிரச்னை, இடமாற்றம் போன்றவை நடந்தாலும் வீட்டில் பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காமல், படிக்காமல் விஷமத்தனங்கள் செய்தாலும், ‘சனியனே! உன்னை ஏழரை சனி பிடித்து ஆட்டுது’ என்று சொல்லி திட்டுவார்கள்.

உன்னை புதன் பிடித்து ஆட்டுகிறது. கேது ஆட்டுவிக்கிறான் என்று யாரும் சொல்வதில்லை. எந்த கிரக திசா புக்தி மூலம் ஒருவருக்கு கெடுதல் வந்தாலும் சனீஸ்வரரின் தலைதான் உருளும். இதில் சிறிதளவும் உண்மை கிடையாது.

எல்லா கிரகங்களுக்கும் நன்மை, தீமை செய்கின்ற அதிகாரம் உண்டு. சனி மட்டுமே கெடுபலன்கள் தருவார் என்ற எண்ணம் நம்மிடையே தவறாக ஏற்பட்டு விட்டது.

இப்படி சர்வ வல்லமை பெற்ற சனி கிரகம் ஒரு ராசியை கடக்க ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் ஆகின்றது. அந்த வகையில் சனிபகவான் தன் உச்ச ராசியை அடைய சுமார் 30 ஆண்டுகள் பிடிக்கும்.

www.aadhiguru.com

இதனால் ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், கும்ப ராசிகளில் பிறந்தவர்களுக்கு இந்த உச்ச சனியால் சகல யோக அதிர்ஷ்டங்கள், சுப விசேஷங்கள் கூடிவரும். யோக பாக்யத்தை அருள்வார்.

மற்ற ராசிக்காரர்களுக்கு ஏற்ற இறக்கங்கள், நிறை, குறைகள், கஷ்ட-நஷ்டங்கள் இருந்தாலும் உச்ச பலம் காரணமாக சில சாதகமான பலன்கள் உண்டாகும். ஜாதகத்தில் சனி திசை நடப்பவர்களுக்கு இந்த உச்ச நேரம் மிகப் பெரிய ராஜ யோகத்தை அளிக்கும்.

*சனீஸ்வரனுக்கு பிடித்த எளிய பரிகாரங்கள்*
பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், முதியோர்கள், ஆதரவற்றோர், கடின உழைப்பாளிகள், தொழிலாளிகள், பாரம் தூக்குவோர், துப்புரவு தொழிலாளிகள் போன்றவர்களுக்கு செய்யும் உதவியும், தொண்டும் சனீஸ்வரருக்கு மிகவும் பிடித்தமானதாகும்.

- சனி ஸ்தலமான திருநள்ளாறு சென்று வழிபட்டு அன்னதானம் செய்யலாம்.

- நவ திருப்பதிகளில் பெருங்குளம் சனி பரிகார ஸ்தலமாகும்.

- சனிக்கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடலாம்.

www.aadhiguru.com

- சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வணங்கலாம்.

- சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, 8 சிதறு தேங்காய் உடைத்து வழிபடலாம்.

- ஏழைகளுக்கு, குறிப்பாக வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு நல்லெண்ணெய் தானம் செய்யலாம்.

- இல்லாதோர், இயலாதோர், சாலையோரம் வசிப்பவர்களுக்கு இரும்பு சட்டி வாங்கி தரலாம்.

- சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்களில் அன்னதானம், வஸ்திர தானம் செய்வது சிறப்பு.                                           --   யாருக்கும் கெடுதல் மனதளவிலும் நினைக்காத நல்ல உள்ளங்களுக்கு நீதிதேவன் சனீஸ்வரபகவானால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது 
*ஜோதிடர் லட்சுமி நாராயணன் *

1. சனியானவர் ஜன்ம லக்னத்தில் இருந்தாரானால் அது சொந்த வீடாக இல்லாத பட்சத்தில் ஜாதகரின் வாழ்க்கையில் சங்கடங்கள் சூழக் கூடும். ஜாதகர் வறுமையில் உழல்வார். மட்டமான செயல்களைச் செய்யக்கூடியவர் ஆவார். மந்தமாகப் பேசுவார்.

2. லக்னத்தில் சனி இருக்கப் பெற்று சனிக்கு அது பகைவீடாக இருக்குமானால் நண்பருடன் சண்டை போடுகிற குணம் ஜாதகருக்கு அமையும். ஜன்ம லக்னம் துலாமாகவோ, தனுசாகவோ, மீனமாகவோ அமைந்து அதில் சனி இருக்கப் பெற்றால் ஜாதகருக்கு உயர்வுகள் உண்டு. தோற்றப் பொலிவு இருக்கும். ஒரு குழுவுக்குத் தலைமை தாங்கும் தகுதி ஏற்படும்.

3. மகரம் அல்லது கும்பம் ஜன்ம லக்னமாகி சனியானவர் அங்கே இருக்கப் பெற்றால் ஜாதகருக்கு விசேஷமான தகுதிகள் நன்மைகள் சிறப்புகள் எல்லாம் உண்டாகும்.

www.aadhiguru.com.

4.ரிஷபத்தில் உள்ள சனியானவர் அது ஜன்ம லக்னமானால் சிறப்பான பலன்களைத் தருவார் என்று சில கிரந்தங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.

5. 2-ஆம் இடத்தில் உள்ள சனி நிறையப் பணம் தருவார். ஆனால், அந்தப் பணத்தை இழக்கக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படக்கூடும். 2-ல் உள்ள சனியினால் முகத்தில் நோய் அல்லது வாயில் புண் ஆகியவை உண்டாகக் கூடும்.

6. சனியானவர் 2-ஆம் இடத்தில் இருந்தாரானால் தாய்நாட்டை விட்டு வெளிநாட்டிற்குச் சென்று சுகபோகங்களையும், செல்வங்களையும் பெறக்கூடியவராக இருப்பார்.

www.aadhiguru.com
7. 2-ல் உள்ள சனியால் ஜாதகருக்குத் தாயிடம் பக்தியுண்டாகும். ஆனால், சகோதர பாசம் இராது.

8. 2-ல் உள்ள சனிக்குச் சுபபலம் இருக்குமானால் அதாவது ஆட்சி, உச்சம் போன்ற நிலை இருக்குமானால் குறைகள் குறையவும், நிறைகள் அதிகமாகவும் சந்தர்ப்பமுண்டு.

9. 3-ஆம் இடத்தில் உள்ள சனி அறிவு, ஆற்றல் இரண்டையும் தருவார். ஆனால், மனோவியாகூலம் அவ்வப்போது உண்டாகும்.

www.aadhiguru.com

10. சனியானவர் 3-ல் இருந்தால் ஜாதகருக்குத் தரும குணம் இருக்காது.

11. 3-ஆம் இடத்தில் உள்ள சனியால், தந்தை வழி நலம் குறையும். சொத்துக்கள் சேர்மானம் இராது. இருதயநோய் ஏற்படக்கூடும். வயிற்றுவலியும் உண்டாகக்கூடும்.
12. 3ஆம் இடத்தில் சனி அமரும் போது முயற்சியில் சோர்வு ஏற்படும்.
13.4-ல் சனி பழைய வீடு வாகன அமைப்பு ஏற்படும். பலம் இல்லாத பட்சத்தில் சுகம் திருப்தி இருக்காது.

14. 4-ஆம் இடத்தில் உள்ள சனியினால் அந்நிய தேசவாசம் ஜாதகருக்கு உண்டாகும்.

15. பலம் பொருந்தியவராக உள்ள சனி 4-ல் இருப்பாரானால் ஜாதகருக்குச் சுபிட்சமும், செல்வமும் வாகனவசதியும் ஏற்படத் தடையிராது.

www.aadhiguru.com
16. 5-ல் சனி மக்கள் பாக்கியத்தைக் குறைப்பார். புத்திர தோஷம் உண்டாகக் கூடும். மேலும் செல்வம் சந்தோஷம் இவைகள் குறையும்.

17. 5-ல் உள்ள சனி ஜாதகருக்குப் புத்தி மந்தத்தை உண்டு பண்ணுவார். பகைவரால் தொல்லையை உண்டாக்க கூடும். மனநலம் திருப்திதராது. நேர்வழியில் சிந்தனை செல்லாது. மனோவியாதி உண்டாக கூடும்.

18. 5-ல் உள்ள சனியின் மூலம் வயிற்றுநோய் உண்டாகலாம். ஆனால் பொதுவாக ஓர் உன்னதமான வாழ்க்கை பெறுவதற்குச் சந்தர்ப்பமுண்டு.

19. 6-ல் உள்ள சனி உச்சமாகவோ, ஆட்சியாகவோ இருந்தாரானால் கெட்ட பலன்கள் பெருமளவுக்கு குறைந்து விடும். நல்ல பலன்கள் இடம்பெறும்.

www.aadhiguru.com
20. 6-ஆம் இடத்தில் சனிக்குப் பலம் இருக்குமானால் ஜாதகர் பகைவரை வெற்றிக் கொள்வார். பலம் குறைந்த சனியினால் ஜாதகர் பகைவரால் ஒடுக்கப்படுவார்.

21. 6-ல் உள்ள சனி பகைவருடைய வீட்டிலோ, நீச்ச நிலையிலோ இருப்பாரேயானால், பிறந்த குடிக்கே நாசம் தேடுவார். மேலும் வாழ்வில் சோதனையை ஜாதகர் சந்திக்கக்கூடும்.

22. பொதுவாக 6-ஆம் இடம் சனிக்கு ஏற்புடைய இடமாகையால் ஜாதகர் கவுரவமாகவும், செல்வ சுகங்களோடும் வாழக்கூடும். ஜீரண சக்தியும் ஜாதகருக்கு இருக்கும்.

23. 6-ஆம் இடத்தில் உள்ள சனியினால் தாய் நலம் பாதிக்கப்படும். வயிற்றுப்புண் ஏற்படக்கூடும். இந்தச் சனி பலமுள்ளவராக இருந்தால் ஜாதகருக்கு நோய் நொடிகள் உண்டாகாமல் ஆரோக்கியம் இருந்து வரும்.

24. 7-ல் உள்ள சனியினால் நன்மைகள் குறையும். செல்வ சுபிட்சம் குறையும்
. 7-ல் உள்ள சனியினால் நன்மைகள் குறையும். செல்வ சுபிட்சம் குறையும். அலைச்சல்கள் அதிகமாகும்.

www.aadhiguru.com

25. 7-ஆம் இடத்தில் உள்ள சனி, ஆண் ஜாதகருக்குத் தகாத பெண் சேர்க்கையை உண்டாக்கும். கீழ்த்தரமான செயல்களை ஜாதகர் செய்ய நேரும்.

26. 8-ல் உள்ள சனியால் கண்பார்வை மங்கக்கூடும். வயிற்றுக் கோளாறு உண்டாகக் கூடும்.

27. 8-ல் உள்ள சனி ஜாதகருக்குப் பணத்தைச் சேர்த்துத் தருவாரே தவிர மதிப்பை தர மாட்டார். ஜாதகர் அடிமைவேலை செய்ய வேண்டியிருக்கும். சுயமாக பெரிய காரியங்களை நிர்வகிக்கக்கூடிய ஆற்றல் இல்லாமல் போகும்.

28. 8-ல் உள்ள சனி இளம் வயதில் ஜாதகருக்கு மகிழ்ச்சியை தரமாட்டார். ஆயுளை தீர்க்கமாகக் கொடுப்பார்.

29. 9-ல் உள்ள சனியால் ஜாதகருக்குப் பணம் குவியும். மகிழ்ச்சி ஏற்படும். மக்களால் மகிழ்ச்சியுண்டாகும்.

30. சனி 9-ல் இருக்கப் பிறந்தவர்களுக்கு வேதாந்த மனப்பான்மை ஏற்படும். ஜோதிடம் போன்ற கலைகளில் பாண்டித்யம் உண்டாகும்.

www.aadhiguru.com
31. 9-ல் உள்ள சனி பலவீனம் பெற்றிருந்தால் ஜாதகருக்கு அதிர்ஷ்டக்குறைவு உண்டாகும். மற்றவர்களுக்கு ஜாதகரால் தொல்லை விளையக்கூடும்.

32. பெரும்பாலும் 9-ல் உள்ள சனி ஜாதகருக்கு வெளிநாட்டில் யோகத்தை உண்டு பண்ணுவார்.

33. 10-ஆம் இடத்தில் உள்ள சனியானவர் விவசாயம் மற்றும் தானியங்கள், எண்ணெய், உரம் ஆகியவற்றின் மூலம் ஜாதகர் பொருள் திரட்ட சந்தர்ப்பத்தைத் தேடித்தருவார்.

34. 10-ல் உள்ள சனி ஜாதகருக்கு சாத்திர ஞானத்தை உண்டு பண்ணுவார். சிறந்த கல்வி ஜாதகருக்கு உண்டாகும். தைரியம் புகழும் ஜாதகரை வந்து சேரும்.

35. 10-ல் உள்ள சனி ஜாதகரை பணக்காரராக்குவார். உயர்ந்த ஸ்தானத்தைக் கொடுப்பார். பெரிய நிர்வாகியாக விளங்குவார்.

36. 10-ஆம் இடத்தில் சனி உள்ளவர்கள் சமூகத்திற்குத் தலைமை தாங்க முடியும். பெரிய குழுவுக்கு ஜாதகர் தலைமை தாங்கும் சக்தி ஏற்படக் கூடும்.

மேலும் ஜோதிடம் சார்ந்த அனைத்து தகவல்களும் www.aadhiguru.com

ஜோதிடம் சிறந்த முறையில் கற்க

ஸ்ரீ ஆதி குரு ஜோதிடம் சென்னை.

9600 666 225.

 

Comments

Add new comment