You are here

எதிரிடை நட்சத்திரம்..

எதிரிடை நட்சத்திரம்..

jothidam
1
by aadhiguru

எதிரிடை நட்சத்திரங்கள் விபரமும் பலன்களும்

நவக்கிரகங்கள் ஒவ்வொருவரும் தான் எந்த நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார்களோ அந்த நட்சத்திரத்திற்கு எதிராக செயல்படும் நட்சத்திரம் ஒன்று வரும் அந்த எதிர்ப்பாக செயல்படும் நட்சத்திரத்தில் எந்த கிரகம் நிற்கிறதோ அந்த கிரகமானது சஞ்சாரம் செய்யும் எந்த கிரகத்திற்கும் எதிராக அமைந்து அந்த கிரகத்தின் காரக ஆதிபத்திய பலன் எதிர்ப்பாக அமைந்து நட்சத்திரத்தை பெற்ற கிரகத்திற்கு கிடைக்காது இப்படி எதிர்ப்பாக அமையும் நட்சத்திரத்தை தாம் எதிரிடை நட்சத்திரம் என்று சொல்வது

நவகிரகங்களின் அஸ்வினி முதல் ரேவதி வரை நட்சத்திரங்களின் எதிரிடை நட்சத்திரத்தை எளிதாக புரிந்து கொள்வதற்கு 

உதாரணமாக சூரியன் அஸ்வினி நட்சத்திரத்தில் நின்றால் அந்த அஸ்வினி நட்சத்திரத்தில் இருந்து

5ஆவது நட்சத்திரம் மிருகசீரிஷம் 7வது நட்சத்திரம் புனர்பூசம்
8வது நட்சத்திரம் பூசம் 
10 வது நட்சத்திரம் மகம் 
14வது நட்சத்திரம் சித்திரை
 15 ஆவது நட்சத்திரம் சுவாதி

அப்படி என்றால் சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து5,7,8,10,12,14,15,18,21,22,23,27 எதிரிடை நட்சத்திரங்கள் 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரத்தில் நின்றாலும் 

 சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து5,7,8,10,14,15 இந்த நட்சத்திரங்கள் எதிரிடை நட்சத்திரமாக செயல்படும் இவ்வாறாக மற்ற கிரகங்களும் விளக்கம் கீழே தரப்பட்டுள்ளது

நவகிரகங்கள் நின்ற நட்சத்திரத்திலிருந்து

சூரியன்--5,7,8,10,12,14,15,18,21,22,23,27.
சந்திரன்---3,5,78,12,18,24.
செவ்வாய் ---3,7,10,15,21.
புதன்--- 5,11,21,22
குரு ---- 6,7,9
சுக்கிரன் ---- 20,22,24
சனி ----- 5,6,8,10,11,20,26.
ராகு ---- 20,28
கேது--- 20,28

கிரகங்கள் தான் நின்ற நட்சத்திரத்திலிருந்து நட்சத்திர வரிசையில் எதிரிடை நட்சத்திரம் ஆக செயல்படுகின்ற நட்சத்திரங்கள் எண்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன இவை எப்படி என்பதை நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக பதிவிடுகிறேன்.

கோள்களின் கோலாட்டம் நூலிற்கு நன்றி
அன்புடன் ஸ்ரீ ஆதி குரு ஜோதிடம்
சென்னை - 9600 666 225.

www.aadhiguru.com

ஜோதிடம் சார்ந்த அனைத்து பயிற்ச்சிகளும் சிறந்த முறையில் அளிக்கப்படும்..

நன்றி வணக்கம்.

மேலும் எதிரிடை நட்சதிர பலன்கள்.

லக்கினாதிபதி நின்ற நட்சத்திரத்தில் லக்கினம் அமைந்தால் முன்னிற்கு முரணாக செயல்படும் ஜாதகமாகும்.  லக்கினாதிபதியால் கிடைக்கும் பலன்கள் ஜாதகனுக்கு கிடைக்காது சரிவர செயல்படாது.

                2 – க்குரியவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் லக்கினமோ, லக்கினாதிபதியோ அமர்ந்தால் 2 – க்குரியவரால் கிடைக்கும் பலன்கள் ஜாதகருக்கு கிடைக்காது.  சந்திரன் அமர்ந்தால் அனுபவிக்க இயலாது.

                3 –  க்குரியவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் லக்கினமோ, லக்கினாதிபதியோ, சந்திரனோ அமைந்தால் 3 – க்குரியவரால் 3 – ஆம் பாவத்தில் கிடைக்கக்கூடிய பலன்கள் முழுமையாக இல்லாமல் போகலாம்.  அப்படி கிடைத்தாலும் அதை அனுபவிக்க முடியாமல் போகும்.  இதே போல் 12 பாவத்திற்குரியவர் அமைப்பும் பார்த்து பலன்களை நிர்ணயம் செய்து கொள்ளலாம்,

                லக்கினாதிபதி நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தில் லக்கினமோ – சந்திரனோ அமைந்தால் லக்கினாதிபதியால் கிடைக்கக்கூடிய பலன்கள் சிறப்புகள் உயர்வுகள் ஜாதகருக்கு உறுதியாக கிடைக்கும்.

                2 – க்குரியவர் நின்ற நட்சத்திரத்தின எதிரிடையான நட்சத்திரத்தில்  லக்கினமோ, லக்கினாதிபதியோ, சந்திரனோ அமர்ந்தால் 2 – க்குரியவரால் கிடைக்கும் அனைத்து பலன்களும் ஜாதகருக்கு கிடைக்கும் அனுபவிக்கும் நிலையும் ஏற்படும்.

                3 – க்குரியவர் நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தில் லக்கினமோ, லக்கினாதிபதியோ, சந்திரனோ அமர்ந்தால் 3 – க்குரியவரால் கிடைக்கும் அனைத்து பலன்களும் ஜாதகருக்கு கிடைக்கும் அனுபவிக்கும் நிலையும் ஏற்படும்.

                இதே போல் 12 பாவத்திற்குரியவர்களின் பலனையும் பார்த்து நிர்ணயம் செய்து கொள்ளலாம்.

                நட்சத்திரங்களின் எதிரிடை, சாதக நிலைகளை அந்தந்த பாதரீதியாக பார்ப்பது சூட்சம நிலையாகும் அப்படி பாத ரீதியாக நட்சத்திர எதிரிடை, சாதக நிலை அமைந்து விட்டால் சொல்லும் பலன்களில் தவறு வருவதற்கில்லை.

                உதாரணமாக :-  லக்கினாதிபதியாக சுக்கிரன் நின்ற நட்சத்திரம் அனுஷம் நட்சத்திரத்தின் முதல் பாதம் எனில் இதன் எதிரிடையான நட்சத்திரம் அஸ்தல் முதல் பாதமாக வரும் இந்த நட்சத்திரத்தில் இருக்கும் கிரகம் எதுவோ அது இந்த ஜாதகருக்கு எதிரிடையாக செயல்பட்டு பாதிப்பான பலன்களைத் தரும்.

                இதே போல் லக்கினாதிபதியான சுக்கிரன் நின்ற நட்சத்திரமான அனுசம் முதல் பாதத்திற்கு சாதகமான நட்சத்திரம் சுவாதி நட்சத்திரத்தின் முதல் பாதமாகும்.  இந்த சுவாதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் நிற்கும் கிரகத்தின் மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் சாதகமாக செயல்பட்டு நல்ல பலன்களை அதன் தசாபுத்தி காலங்களில் தரும்.

                நட்சத்திரங்களின் எதிரிடை —  சாதக தன்மைகளை நட்சத்திரத்திற்கு நட்சத்திரம் பார்ப்பது சூட்சும நிலை.  பாதரீதியாக பார்ப்பது அதி சூட்சும நிலை இவ்வகை நிலைகளைப் பொறுத்தே கோள்களின் சூட்சம விளையாட்டுக்கள் ஏற்படுகிறது.

                எந்த ஒரு பாவாதிபதியானாலும் அந்த பாவாதிபதி பெற்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் எந்த ஒரு பாவத்தின் அதிபதி நிற்கின்றாரோ அந்த பாவாதிபதி எதிரிடையாக செயல்படுவார்.

                5 – ஆம் பாவாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் 9 – ஆம் பாவாதிபதி நின்றால் தந்தையால் குழந்தைகளுக்கு பெற்ற பிள்ளைகளுக்கு எதிரி£ன செயல்கள் இதேபோல் பலன்கள் மாறி மாறி செயல்படும் என்பதை ஜோதிட கலைஞர்கள் வாசகநேயர்கள் யுக்தியோடு தெரிந்து செயல்படுவது நல்லது.  இதன் மூலம் மிக நுட்பமான சூட்சுமமான பலன்களை எளிதில் அறியலாம்.

                எந்த ஒரு கிரகம் நின்ற நட்சத்திரத்திற்கு எதிரிடையான நட்சத்திரத்தில் சந்திரன் அல்லது லக்கினம் அல்லது லக்கினாதிபதி நின்றால் அந்த கிரகத்தின் காரகத்திற்கு எதிர்ப்பாக ஜாதக செயல்படுவார்.

                உதாரணமாக சூரியன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் சந்திரன் அல்லது லக்கினம்.  லக்கினாதிபதி இருந்தால் ஜாதகர் தந்தைக்கு எதிராக செயல்படுவார்.  தந்தை மீது பற்றில்லாதவராக தந்தை மகன் மீது பற்று இல்லாதவராக அரசாங்கத்திற்கு விரோதமாக, அரசாங்க ஆதரவு இல்லாதவராக இருப்பார்.  ஆக சூரியனுக்கு உரிய காரக பலன்கள் இல்லாமல் இருக்கும்.

மேலும் பல தகவள்கள் தொடரும் நன்றிி

ஸ்ரீ ஆதிகுரு ஜோதிட ஆராய்ச்சி மையம் சென்னை:cell:9600666225

 

 

Comments

சார் வணக்கம் நேற்று நான் போட்டது அப்படியே எடுத்து பேஸ்ட் பண்ணியதற்கு மிக்க நன்றிகள் சார் வணக்கம்

Add new comment