You are here

காலசக்கர திசை

காலசக்கர திசை

jothidam
1
by aadhiguru

*காலசக்கர திசை*
***********************
பொதுவாக நட்சத்திரங்களை நாள்கள் என்றும் சொல்வதுண்டு
நாள்கள் என்று வரும் இடங்களில் நட்சத்திரங்கள் என்றே பொருளை எடுத்துக்கொள்ள வேண்டும்
இருபத்து ஏழு நட்சத்திரங்களில்
வலமாக சுற்றி வரும் நட்சத்திரங்கள் 15 நட்சத்திரங்கள் இவைகளை வலவோட்டு நட்சத்திரங்கள் என்றும்
இடமாக சுற்றி வரும் நட்சத்திரங்கள் 12 நட்சத்திரங்கள் இவைகளை இடவோட்டு நட்சத்திரங்கள் என்றும் பெயரில் எடுத்து கொள்ள வேண்டும்
இவைகளை ஏன் வலவோட்டு கால் இடவோட்டுக்கால்
என்று கூற வேண்டும் என்றால்
கால வட்டத்தில் நிலையாக இருக்கும் நட்சத்திரங்கள்
அசுவனி முதலாக ரேவதி வரையில் வலமாக இடம் பெற்று உள்ளன
அதே நட்சத்திரங்கள் இங்கு கால்ச்சக்கிர திசைகள் கொள்வதற்காக பிரிக்கப்பட்டு பார்க்கப்படும்
உடு திசையில் ஒரு நட்சத்திரம் ஒரு திசையை கூறும்
உதாரணத்திற்கு அசுவனி என்றால் கேது திசை 
பரணி என்றால் சுக்கிரன் திசை கிருத்திகை என்றால் சூரியன் திசை என்று வரிப்படும்
ஆனால் காலச்சக்கிர திசையில் ஒரு நட்சத்திரம் நான்கு திசைகள் நடத்தும்
அதாவது ஒரு நட்சத்திரம் நான்கு பாதங்களை உடையது அந்த ஒவ்வொரு பாதத்திற்கு ஒரு திசை
அசுவனி 1 ம் பாதம் செவ்வாய் திசை
அசுவனி 2 ம் பாதம் சுக்கிரன் திசை
அசுவனி 3 ம் பாதம் புதன் திசை
அசுவனி 4 ம் பாதம் சந்திரன் திசை என்று
ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு நான்கு திசைகளை நடத்தும்
உடு திசையில் நட்சத்திர அதிபர் யாரோ அவர் திசை என்று கூறுகிறோம்
ஆனால் காலச்சக்கிர திசை ராசி அதிபன் யாரொ அவர் திசை என்று கூற வேண்டும்
அசுவனி 1 ம் பாதம் செவ்வாய் திசை என்றால்
அதை மேசசெவ்வாய் திசை என்றும்
அசுவனி 2 ம் பாதம் சுக்கிரன் திசை என்றால்
ரிசப சுக்கிரன் திசை என்றும் கூறவேண்டும்
இப்படியே மேசம் தொடங்கி மீனம் வரையில்
12 ராசிகளும் 12 பாதங்களை கொண்டு திசைகள் நடத்தும்
அந்த 12 பாதங்கள்
அசுவனி யில் 4 பாதங்களும்
பரணி யில் 4 பாதங்களும்
கிருத்திகை யில் 4 பாதங்களும் ஆகும்
மூன்று நட்சத்திரங்கள் நவாம்சத்தில் அடைவது போல
திசைகள் அடைந்து நடத்தும்
இவைகள் மேசம் முதல் மீனம் வரை வலமாக நடந்து வருவதால் இதற்கு வலவோட்டு நட்சத்திரங்கள் என்றும் பெயர்கள்
மேலே கண்ட பதிவின் படி
வலவோட்டு நட்சத்திரங்கள் எப்படி எதனால் வலவோட்டு நட்சத்திரங்கள் என்று சொல்லப்படுகிறது என்பதை பார்த்தோம்
அடுத்து இடவோட்டு நட்சத்திரங்கள் பற்றியும் பார்ப்போம்
மேசம் தொடங்கிய வலவோட்டு நட்சத்திர பாதங்கள் வரிசையாக அசுவனி பரணி கார்த்திகை என்று மீனத்தில் முடிந்ததும்
மீண்டும் அந்த வரிசைகள் மீனத்தில் இருந்து விருச்சிகத்தில் பாய்ந்து
விருட்சகம் 
துலாம்
கன்னி
சிம்மம்
கடகம்
மிதுனம்
ரிசபம்
மேசம்
மீனம்
கும்பம்
மகரம்
தனசு என்று இடப்பக்கத்தில் இருந்து சுற்றி வரும்
அதனால் அதற்கு இடவோட்டு கால் இடவோட்டு நட்சத்திரங்கள் அப்பிரதட்ச்சனம் அபசவ்யம் என்று பல பெயர்கள் சொல்லி அழைக்கப்படும்
அதாவது வலவோட்டு நட்சத்திரம் கிருத்திகை மீனத்தில் முடிந்து ரோகிணி நட்சத்திரம் முதல் பாதம் விருட்சகம் இரண்டாம் பாதம் துலாம் மூன்றாம் பாதம் கன்னி நான்காவது பாதம் சிம்மம் 
அடுத்து மிருகசீரிடம் ஒன்னாம் பாதம் கடகம் இரண்டாம் பாதம் மிதுனம் மூன்றாவது பாதம் ரிசபம்
நான்காவது பாதம் மேசம் திருவாதிரை ஒன்னாம் பாதம் மீனம் இரண்டாம் பாதம் கும்பம் மூன்றாவது பாதம் மகரம் நான்காவது பாதம் தனுசு என்று முடியும்
இவைகளை சொல்லும் போது அந்த ராசியின் பெயரை சொல்லியே சொல்ல வேண்டும்
விருட்சிக செவ்வாய் துலா சுக்கிரன் கன்னி புதன் என்று வரிசைக்கிரமமாக தனுசு வரையிலான ராசிகளை சொல்ல வேண்டும்
இப்போது இடவோட்டு நட்சத்திரங்கள் எப்படி இடவோட்டு கால் என்று அழைக்கப்படுகிறது என்று பார்த்தோம்
இப்படியாக மூன்று நட்சத்திரங்கள் வலமாகவும்
மூன்று நட்சத்திரங்கள் இடமாகவும் சுற்றிச் சுற்றி வரும்
அவைகளை பற்றி பார்ப்போம்
வரிசை படி உள்ள 27 நட்சத்திரங்களும்
முதல் மூன்று நட்சத்திரம் வலவோட்டு நாள் என்றும்
அடுத்த மூன்று நட்சத்திரம் இடவோட்டு நாள் என்றும்
மீண்டும் மூன்று நட்சத்திரம் வலவோட்டு என்றும்

இப்படி மாறி மாறி மாறி மாறி வரும்
அப்படி வரும் நட்சத்திரங்கள் எவை எவை வலவோட்டு நட்சத்திரங்கள் என்று பார்ப்போம்
அசுவனி
பரணி
கார்த்திகை
புனர்பூசம்
பூசம்
ஆயியம்
அஸ்தம்
சித்திரை
சுவாதி
மூலம் 
பூராடம்
உத்திராடம்
பூரட்டாதி
உத்திரட்டாதி
ரேவதி ஆகிய
பதினைந்து நட்சத்திரங்களும் வலவோட்டு
நட்சத்திரங்கள் ஆகும்
மேலே சொல்லப்பட்ட வலவோட்டு நட்சத்திரங்கள் 15 ம்
போக மீதி இருக்கும் 12 நட்சத்திரங்கள் இடவோட்டு நட்சத்திரங்கள் ஆகும் அவைகள்
ரோகிணி
மிருகசீரிடம்
திருவாதிரை
மகம்
பூரம்
உத்திரம்
விசாகம்
அனுசம்
கேட்டை
திருவோணம்
அவிட்டம்
சதயம்
ஆகிய 12 நட்சத்திரங்கள் இடவோட்டு நட்சத்திரங்கள் ஆகும்
இந்த வலவோட்டு இடவோட்டு நட்சத்திரங்களை
இன்னும் ஒரு பிரிவாக கணிதம் செய்வதற்கு இலகுவாக இருக்க பிரித்து உள்ளார்கள்
அவைகளை பற்றியும் பார்ப்போம்
அதாவது வாழவோட்டில் வரும் முதல் நட்சத்திரங்கள் என்று சொல்லும் அசுவனி பரணி கிருத்திகை இந்த மூன்று நட்சத்திரங்களை முதல் நட்சத்திர மான
அசுவனி யை முதல் நாள் என்றும் 
பரணி யை இடை நாள் என்றும்
கிருத்திகை யை கடை நாள் என்றும்
சொல்ல வேண்டும்
அதாவது
வலவோட்டு முதல் நாள்
வலவோட்டு இடை நாள்
வலவோட்டு கடை நாள்
என்று பெயர் 
இவைகளுக்கு ஏன் இப்பெயர் ஏற்பட்டது என்றால்
இவைகள் மேசம் தொடங்கி மீனம் வரையில் திசைகள்
நடத்து வதால் இவைகளை
மேசத்தில் இருந்து கடகம் வரையில் வரும் அசுவனி முதல் நாள் ஆகிறது
சிம்மத்தில் இருந்து விருட்சிகம் வரையில் வரும் பரணி
இடை நாள் ஆகிறது
தனுசில் இருந்து மீனம் வரையில் வரும் கிருத்திகை
கடை நாள் ஆகிறது
இவ்வாறு வலவோட்டில் மேசத்தில் தொடங்கி
கடகம் வரையில் வரும்
அசுவனி
புனர்பூசம்
அஸ்தம்
மூலம்
பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்கள் வலவோட்டு 
முதல் நாள் ஆகும்
பரணி
பூசம்
சித்திரை
பூராடம்
உத்திரட்டாதி ஆகிய ஐந்தும் வலவோட்டு
இடை நாள் ஆகும்
கார்த்திகை
ஆயில்யம்
சுவாதி
உத்திராடம்
ரேவதி ஆகிய ஐந்தும் கடை நாள் ஆகும்
அதாவது வலவோட்டில் வரும் 15 நட்சத்திரங்கள் மூன்றாக பிரித்து இவ்வாறு அழைக்கப்படும்
மேலே கண்ட பிரிவுகள் இடவோட்டு நட்சத்திரங்களுக்கும் உண்டு அவைகள்
ரோகிணி
மகம்
விசாகம்
திருவோணம்
இவைகள் நான்கும் இடவோட்டு முதல் நாள் என்றும்
மிருகசீரிடம்
பூரம்
அனுசம்
அவிட்டம்
இவைகள் நான்கும் இடவோட்டு இடை நாள் என்றும்
திருவாதிரை
உத்திரம்
கேட்டை
சதயம்
இவைகள் நான்கும் இடவோட்டு கடை நாள் என்றும்
அறிந்துகொள்ள வேண்டும்
காலச்சக்கிர திசைகள் பற்றி அறிவோம்
உடு திசையில் ஒரு நட்சத்திரம் ஒரு திசையை நடத்தும்
அப்படி 27 நட்சத்திரங்களும் மூன்று பிரிவுகள் ஆக பகிர்ந்து 9 நட்சத்திரங்கள் ஒன்பது கிரஹங்களின் திசையாக வரும்
காலச்சக்கிர திசையில் 7 கிரஹங்களுக்கு மட்டுமே திசைகள் உண்டு
ராகு கேது வுக்கு திசைகள் இல்லை
அவைகளுக்கு கதிர்கள் உண்டு அது பற்றி பிறகு பார்ப்போம்
இந்த 7 கிரஹங்கள் மேசம் தொடங்கி மீனம் வரையில் அந்த அந்த ராசியின் அதிபன் திசையாக நடக்கும் இவைகள் வலவோட்டு திசைகள் என்று அழைக்கப்படும்
இடவோட்டு திசைகள் விருட்சிகம் தொடங்கி இடமாக தனுசு வரையில் அந்த அந்த ராசியின் அதிபன் பெயரில் திசைகள் நடக்கும் இவைகள் இடவோட்டு திசைகள் என்று அழைக்கப்படும்
அப்படி நடக்கும் திசைகளுக்கு உடு திசையில் வரும் ஆண்டுகள் போல இல்லாமல் மாறுபடும் அவைகள்
செவ்வாய்க்கு 7 ஆண்டுகள்
சுக்கிரனுக்கு 16 ஆண்டுகள்
புதனுக்கு 9 ஆண்டுகள்
சந்திரனுக்கு 21 ஆண்டுகள்
சூரியனுக்கு 5 ஆண்டுகள்
குருவுக்கு 10 ஆண்டுகள்
சனிக்கு 4 ஆண்டுகள் ஆக இருக்கும்
திசைகள் வரிசைக்கிரமமாக மேசம் தொடங்கி மீனம் வரையில் அந்த ராசியின் பெயரால் அந்த கிரஹத்தின் திசைகள் நடக்கும்
இதை போலவே இடவோட்டு திசைகளும் நடக்கும்
அப்படி திசைகள் நடக்கும்போது வலவோட்டு திசைகள் மீனம் முடிந்து இடவோட்டு திசையாக விருச்சிகம் பாய்ந்து நடத்தும் 
அப்படி மீனம் இருந்து விருச்சிகத்தில் பாய்வதை சிங்காவாகன பாய்ச்சல் என்று பெயர் இதை மனதில் பதிவுகள் செய்து கொள்ள வேண்டும்
அதை போல இடவோட்டு திசைகள் தனுசு முடிந்து மேசம் பாய்ந்து நடக்கும் அந்த பாய்சலை குதிரை பாய்ச்சல் என்று பெயர் இதையும் மனதில் பதிவுகள் செய்து கொள்ள வேண்டும்
வலவோட்டு நட்சத்திரங்கள்
முதல் நாள் 
இடை நாள்
கடை நாள் என்று மூன்று பிரிவாக பிரித்துள்ளதையும்
அதே போல இடவோட்டு நட்சத்திரங்கள் மூன்று பிரிவாக பிரித்துள்ளதையும் மேலே நாம் பார்த்தோம்
இனி அந்த பிரிவுகளில் இருந்து திசைகள் பற்றி அறிவோம்
வலவோட்டு நட்சத்திரங்களில் முதல் நாள் என்று சொல்லும்
அசுவனி
புனர்பூசம்
அஸ்தம்
மூலம்
பூரட்டாதி
ஆகிய ஐந்து நட்சத்திரங்களுக்கும் திசைகள் புத்திகள் ஒரே மாதிரி நடப்பதால் தான் இவைகள் ஒரு பிரிவாக பிரிக்கப்பட்டது
ஒரு நட்சத்திரம் நான்கு பாதங்களை உடையது அதன் ஒவ்வொரு பாதத்திற்கும் ஒரு திசை தொடங்கி அதிலிருந்து ஒன்பது புத்திகள் பிரிக்கப்பட்டு நடத்தும் அவைகளை பற்றி பார்ப்போம்
அசுவனி ஒன்னாம் பாதத்தில் பிறப்பவர்களுக்கு
மேசசெவ்வாய் தான் முதல் திசையாக தொடங்கி அடுத்து
ரிசப சுக்கிரன்
மிதுன புதன்
கடக சந்திரன் என்று வரிசையாக மீனம் வரையில் 
நடக்கும்
அதாவது உடு திசையில் கேது திசையில் ஒருவர் பிறந்தால் அவருக்கு அடுத்து சுக்கிரன் திசையாக வருவது போல
காலச்சக்கிர திசையில் எந்த ராசிக்கு உரிய திசையில் பிறக்கிறோமோ அடுத்து அடுத்த ராசி திசைகள் தொடர்ந்து நடக்கும்
அசுவனி 2 ல் பிறந்தோர்க்கு ரிசப சுக்கிரன் முதல் திசையாக தொடங்கி அடுத்து மிதுன புதனாக நடக்கும்
அசுவனி 3 ல் பிறப்போர்க்கு மிதுன புதனாக தொடங்கி நடக்கும்
அசுவனி 4 க்கு கடக சந்திரன்
பரணி 1 க்கு சிம்ம சூரியன்
இப்படியாக வலவோட்டு முதல் நாள் என்று சொல்லும் மேலே சொல்லப்பட்ட 5 நட்சத்திரங்கள் மேசம் தொடங்கி கடகம் வரையில் திசைகள் நடக்கும்
அதாவது ஐந்து நட்சத்திரங்களுக்கும் முதல் பாதம் 
மேச செவ்வாய் திசை தான்
இரண்டாம் பாதம் ரிசப் சுக்கிரன் தான்
மூன்றாம் பாதம் மிதுன புதன் தான்
நான்காம் பாதம் கடக் சந்திரன் தான்
முதல் திசையாக தொடங்கி நடக்கும்
அடுத்த இடை நாள் ஐந்தும் சிம்மம் தொடங்கி விருட்சிகம் வரையிலும்
அடுத்த கடை நாள் தனுசு தொடங்கி மீனம் வரையிலும் நடக்கும்
ஆக வலவோட்டு முதல் நாளுக்கு நான்கு திசைகளிம்
இடை நாளுக்கு நான்கு திசைகளும்
கடை நாளுக்கு நான்கு திசைகளும்
மொத்த மாக வலவோட்டு நாளுக்கு 12 திசைகள் நடக்கும்
அடுத்து இடவோட்டு திசைகள் பற்றி பார்ப்போம்
இடவோட்டு நட்சத்திரங்கள்
விருட்சிகத்தில் தொடங்கி தனுசு வரையில்
இடமாக சுற்றி திசைகள் நடக்கும்
விருட்சிக செவ்வாய்
துலா சுக்கிரன்
கன்னிபுதன்
சிம்ம சூரியன்
கடக சந்திரன் என்று வரிசையில் தனுசு வரையில் திசைகள் நடக்கும்
மேலே கண்ட வலவோட்டு முதல் நாள் போல
இடவோட்டு முதல் நாள் ஆக வரும் 
ரோகிணி
மகம்
விசாகம்
திருவோணம்
ஆகிய நான்கு நட்சத்திரங்கள்
முதல் பாதம் விருட்சிக செவ்வாய்
இரண்டாம் பாதம் துலா சுக்கிரன்
மூன்றாம் பாதம் கன்னி புதன்
நான்காம் பாதம் சிம்ம சூரியன் ஆகவும்
இடவோட்டு இடை நாள்
மிருகசீரிடம்
பூரம்
அனுசம்
அவிட்டம் ஆகிய நான்கும்
கடக சந்திரன்
மிதுன புதன்
ரிசப சுக்கிரன்
மேச செவ்வாய் ஆக திசைகள் நடத்தும்
இடவோட்டு கடை நாள்
திருவாதிரை
உத்திரம்
கேட்டை
சதயம் ஆகிய நான்கும்
மீன குரு
கும்ப சனி
மகர சனி
தனுசு குரு
ஆக திசைகள் நடத்தும்
இந்த மூன்று பிரிவுகள்
ஒவ்வொரு பிரிவுகள் நான்கு திசைகளாக
12 திசைகள் நடத்தும்
ஆக வலவோட்டு திசைகள் 12
இடவோட்டு திசைகள் 12 மொத்தமாக 24 திசைகள் நடக்கும்
24 திசைகளிலும் ஒன்பது புத்திகள் விதமாக மொத்தமாக 216 புத்திகள் நடக்கும்.

Comments

Very useful massage

Add new comment