You are here

ரஜ்ஜு பொருத்தம்

ரஜ்ஜு பொருத்தம்

jothidam
0
by aadhiguru

ரஜ்ஜு பொருத்தம்     

திருமணத்திற்கு பார்க்கப்படும் 10 பொருத்தங்களில் முக்கியமானது ரஜ்ஜு பொருத்தம். அதாவது 10ல் 9 பொருத்தங்கள் இருந்தாலும், ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றால் அந்த மண மக்களுக்கு திருமணம் செய்து வைக்க மாட்டார்கள். ரஜ்ஜு பொருத்தம் என்பது திருமண பொருத்தத்தில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இது அந்த தம்பதிகளின் வாழ்வைக் குறிக்கும். மிக எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் திருமணம் செய்ய இருக்கும் ஆண் மற்றும் பெண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவாக இல்லாமல் பார்த்து கொள்வது அவசியம். அப்படி இருந்தால் தான் அந்த பெண்ணுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியத்துடன் வாழ்வாள்.

     ரஜ்ஜு பொருத்தத்தில் சில விதிவிலக்குகள் : ஒரே ரஜ்ஜுவில் ஆரோஹனம், அவரோஹனம் என இரு பிரிவுகள் உள்ளன. அதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் .அந்த ஆண் மற்றும் பெண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவாக இருந்தாலும், அதில் ஆரோஹனம், அவரோஹனம் வெவ்வேறாக இருந்தால் திருமணம் செய்யலாம். அதாவது திருமணம் செய்பவர்களில் ஒருவருக்கு ஏறு முகமும், மற்றவருக்கு இறங்குமுகமாகவும் இருப்பது அவசியம். அதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் இருவருக்கும் சிரசு ரஜ்ஜு (தலை) இல்லாமல் இருப்பது அவசியம். ஒரே ரஜ்ஜுவில் ஆரோஹனம், அவரோஹனம் என இரு பிரிவுகள் உள்ளது. முக்கியமான விஷயம் என்னவென்றால் பெண் மற்றும் ஆண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவில் இருந்தாலும், ஆரோஹனம், அவரோஹனம் வேறாக இருந்தால் செய்யலாம். அதாவது ஒருவருக்கு ஏறு முகம் மற்றவருக்கு இறங்குமுகமாக இருக்க வேண்டும். ஆனால் தலை ரஜ்ஜு – சிரசு ரஜ்ஜுயாக இருவருக்கும் இருந்தால் கண்டிப்பாக பொருத்தம் இல்லை.

ஐந்துவகை ரஜ்ஜு பொருத்தம்:

1.சிரசு ரஜ்ஜு (தலை),

2கண்ட ரஜ்ஜு (கழுத்து),

3 உதர ரஜ்ஜு (வயிறு),

4 ஊரு ரஜ்ஜு (தொடை),

5 பாத ரஜ்ஜு (கால்) என ஐந்து வகைகள் உள்ளன.

சிரசு ரஜ்ஜு என்றால் என்ன? இந்த ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் ஆணுக்கு தீங்கு தருவதாக இருக்கும். சிரசு ரஜ்ஜு இருந்தால் தலைக்கு பாதிப்பு அதாவது தலைவனுக்கு பாதிப்பாகும்.

சிரசு ரஜ்ஜு உடைய நட்சத்திரங்கள் :

  • மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் சிரசு (தலை) ரஜ்ஜு கொண்டவை.

கண்ட ரஜ்ஜு என்றால் என்ன? மாங்கல்யம் அணியக்கூடிய கழுத்து கொண்ட பெண்களுக்கு தீமை உண்டாக்க வல்லது. அதாவது கண்டக ரஜ்ஜுவினால் மனைவிக்கு ஆபத்து ஏற்படக்கூடும்.

கண்ட ரஜ்ஜு (கழுத்து) கொண்ட நட்சத்திரங்கள்

  • ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்கள் ஆரோஹனம் கொண்டவை
  • திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்கள் அவரோஹனம் கொண்டவை

உதர ரஜ்ஜு (வயிறு) என்றால் என்ன? வயிறு ரஜ்ஜு இருப்பின் அவர்களுக்கு பிறக்கும் வாரிசுகளுக்கு ஆபத்து ஏற்படும். அல்லது தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுக்கு வாழ்க்கை முடிவு உண்டாகலாம். குழந்தை பாக்கியம் கிடைக்காது.

உதர ரஜ்ஜு (வயிறு) கொண்ட நட்சத்திரங்கள்:-

  • கார்த்திகை, உத்தரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்கள் ஆரோஹனம் கொண்டவை.
  • புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் அவரோஹனம் கொண்டவை.

ஊரு ரஜ்ஜு (தொடை) என்றால் என்ன? ஊரு ரஜ்ஜு என்பது இல்லாவிட்டால் அந்த வீட்டில் செல்வங்கள் மட்டுமில்லாமல் சேமித்த சொத்துக்களும் இழக்க நேரிடும்.

ஊரு ரஜ்ஜு (தொடை) கொண்ட நட்சத்திரங்கள்:-

  • பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்கள் ஆரோஹனம் கொண்டவை
  • பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் கொண்டவை அவரோஹனம் கொண்டவை

பாத ரஜ்ஜு (பாதம்) என்றால் என்ன?

பாத ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் ஒருவர் இருக்கும் இடத்திற்கே ஆபத்தாக்கும். பிரிவு ஏற்படுதல் அல்லது சன்னியாசம் செல்லுதல்.

பாத ரஜ்ஜு (கால் பாதம்) கொண்ட நட்சத்திரங்கள்:-

  • அசுவினி, மகம், மூலம் ஆகியவை – ஆரோஹனம் கொண்டவை
  • ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகியவை – அவரோஹனம் கொண்டவை.

    இவ்வாறு திருமண பொருத்தத்தில் தம்பதிகளின் வாழ்நாட்களைக் குறிக்கிற இந்த ரஜ்ஜுப் பொருத்தத்தில் மேற்கண்ட இந்த நிலைகளால் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாமல் வரும். இப்படி இருக்கும் இந்த ரஜ்ஜுவில் சில நிலைகளின் மூலம் இந்த ரஜ்ஜூ பொருத்தம் இல்லாமலேயே திருமணம் நடத்த தற்போதெல்லாம் அதிகமாகப் பரிந்துரை செய்யப்படுகிறது. அதற்காக தான் திருமண பொருத்தத்தைப் பார்க்கும் போது ஜோதிடத்தில் அனுபவம் உள்ளவரிடம் ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் செய்வது அவசியம்.

நன்றி அன்புடன்

  • MR.கருணாகரன்(BE,DECE,BA(ASTRO),BSC(YOGA),DACU)
    cell-9600666225
    www.aadhiguru.com

Comments

Add new comment