ஜாதக கணிப்பு

ஜாதகம் என்பது சாதகம் ஆகும். அதாவது ஒருவர் பிறக்கும்போதே வாழ்கையில் ஏற்படும் சுகம் மற்றும் துக்கங்களை கண்டுணர்ந்து நமக்கு ஏற்ப சாதகமான வாழ்கையை மற்றிக் கொள்ளுவது ஆகும்.ஜாதக கணிப்பானது குழந்தை பிறந்த தேதி, நேரம், ஊர் அடிப்படையாக கணிக்கப்படுகின்றன.பிறந்த குழந்தையின் ஜாதகத்தை பல முறையில் கணிக்கப்படுகின்றன. அவற்றில்,

  1. வாக்கியம்
  2. திருகணிதம்
  3. கே.பி.முறை

வாக்கியம்

வாக்கியம் முறை பொதுவாக கணிக்கும் முறையாகும் இந்தியாவில் பிறந்த குழந்தைக்கு அனைவருக்கும் ஒரே சூரிய உதயத்தை மையப்படுத்தி கணிக்கப்படுகின்றன.

திருக்கணிதம்

திருக்கணிதமுறையானது ஒவ்வொரு ஊரின் அட்சாம்சம் / ரேகாம்சம் அடிப்படையில் சூரிய உதயம் மாறுபடும் அவற்றின் அடிப்படையில் கணிக்கப்படுகின்றன

உதாரணம்

சென்னையில் சூரிய உதயம் 5.45 எனில், கோவையில் சூரிய உதயம் 6.01 ஆக இருக்கும். எனவே வித்தியாசம் 16 நிமிடம் மாறுபடும். இதனால் ஜாதகம் கணிப்பில் வித்தியாசம் ஏற்படும். எனவே திருக்கணிதம் பலன் சற்று மாறுபடும்.

கே.பி. முறை

கே.பி.முறையானது ஒரு ஜாதகத்தில் மிகவும் துள்ளியமான முறையில் உப நட்சதிரம் அடிப்படையில் கணித்து தரப்படும்.

குறிப்பு

பொதுவாக ஒரு குழந்தை பிறந்த 6 மாதத்திற்கு பிறகு ஜாதகம் கணித்து ஜோதிடரிடம் நோட்டு பெற்றுக் கொள்வது சிறப்பு [ஜாதகத்தை கையில் எழுதி வாங்கினால் அந்த ஜாதகத்துக்கு உயிரோட்டத்தை ஏற்படுத்தும்]

எங்களை அணுக