பாரம்பரிய ஜோதிடம்

உலகில் சூரியனை மையமாக வைத்து கணிக்கப்படுவது பாரம்பரிய ஜோதிடம் ஆகும்.

பாரம்பரிய ஜோதிடம் ஆனது 27 நட்சத்திரம் 12 ராசி 9 கிரகங்களைக் கொண்ட பாவச் சக்கர மண்டலம் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக நட்சத்திரங்கள் கிரகங்களைச் சலனப்படுத்தும். கிரகங்கள் சந்திரன் என்ற மனோ காரகன் மூலமாக மனிதர்களைச் சலனப்படுத்தும். அதனால் ஸ்வாச கதி மாற்றமடைந்து பஞ்சபூதத்தைச் சலனப்படுத்தும். இதனால் 96 தத்துவங்கள் பேதித்துக் கர்மவினை ஏற்படும்.

அது சஞ்சிதம் பிராரப்தம் ஆகாமியம் என்று மூன்று வகைப்படும். சஞ்சிதம், பாவக் கொடுப்பினை என்ற விதி ஆகும். பிராரப்தம், திசா கொடுப்பினை என்ற மதி ஆகும். ஆகாமியம், கோள் சாரம் என்ற கதி ஆகும். இதன் அடிப்படையில் இந்த ஸ்வாசங்கள் ஒரு நாளில் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை சூரிய நாடி சந்திர நாடி என்று மாறியும் அதில் ஒவ்வொன்றிலும் 5 பூதங்களும் இயங்கும்.

இவ்வமைப்பு ஒரு நாளில் 360 டிகிரி என்ற வட்டச் சுற்று முறையில் 21600 சுவாசமாக இயங்கும். இந்த அடிப்படையை வைத்தே சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஒரு ராசியாகவும் மற்ற 5 கிரகங்களுக்கும் இரண்டிரண்டு ராசிகளாகவும் கொடுக்கப்பட்டுள்ளன. இது சூரியனில் இருந்து 5 கோள்களாகவும் சந்திரனிலிருந்து 5 கோள்களாகவும் இருப்பதை ராசிக் கட்டத்திலும் பிரபஞ்சக் கோள் அமைப்பிலும் பார்க்கலாம்.

இவ்வமைப்பை ஏழு நாள் கொண்ட கிழமையின் அடிப்படையில் பிரித்தால் திங்கள், புதன், வெள்ளி, வளர்பிறை வியாழன் ஆகியன சந்திரனாகவும் ஞாயிறு, செவ்வாய், சனி, தேய்பிறை வியாழன் ஆகியன சூரியனாகவும் பகுத்து சரம் கடக ராசியாகவும் ஸ்திரம் சூரியனுடைய ராசியாகவும் உபயம் சுழிமுனை ராசியாகவும் அமைத்துள்ளனர். இச்சாராம்ச அடிப்படையிலேயே முகூர்த்தங்களையும் நல்ல காலங்களையும் சாதகப் பாதகங்களையும் அறிந்துகொள்ளவும் இதுபோலவே பஞ்சபட்சி சாஸ்திர முறையும் பயன்படுத்தப் படுகின்றது என்பதைக் கற்றறிந்தோர் அறிவர்.

ஜோதிட சாஸ்திரத்தில் கால நிர்ணயம் மிக முக்கியமாகும். அதற்குத் துணையாக இருப்பது பாவக் கொடுப்பினை, திசா கொடுப்பினை, கோச்சார அமைப்பு ஆகும். இந்த அடிப்படை விதிகளைக் கொண்டு பலன்கள் ஏற்படும் காலங்களை நிர்ணயிக்கமுடியும். அதோடு தீர்வுமுறைகளையும் சாந்தி முறைகளையும் விலக்கு முறைகளையும் கிரக சார தீமைகளை நிவர்த்திக்கும் பொருட்டு சரம், பஞ்சபட்சி, கக்கிசம்(எண்கள்), மந்திரம், எந்திரம், தந்திரம், என்ற ஆறு சாஸ்திரங்களின் மூலம் அறிந்து செயல்படுத்தினால் மேன்மை அடைய முடியும்.

இதற்கும் நட்சத்திரம், கிரகம், பாவம், திதி, கரணம், யோகம், சரம், ஸ்திரம், உபயம், பஞ்சபூதங்கள், பரியாயப் பெயர்கள், உருவ அமைப்பு இப்படி சுமார் 42 விதமான காரகங்களை அறிந்து செயல்படுத்த வேண்டும் என்பதுதான் பாரம்பரிய ஜோதிடம்.

*ஒவ்வொரு மனிதனும் ஏன் ஜோதிடம் பயில வேண்டும்?*

*ஜோதிடம் ஓர் சிறப்புப் பார்வை*

ஜோதிடம் வேதத்தில் ஓர் அங்கம். இது ஏதோ சென்றகாலம், நிகழ்காலம், எதிர்காலம் இவற்றில் நடந்த, நடக்கும், நடக்க போகின்ற வாழ்க்கை பலன்களை மட்டுமே சொல்லகூடிய கலை இல்லை.

*1-5-9 தர்ம சாஸ்திரம்*
====================

தர்மங்களையும் அறங்களையும் சொல்லித்தருகின்றது. சிருஷ்டியை பற்றி சொல்கின்றது. வழிபாட்டு விசயங்கள் பற்றி அறியச் செய்கின்றது. அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை. தன் முன்னோர்களை பற்றி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி ஒரு மனிதன் அறிய வேண்டும் என்றும் தனக்கு பிறகு தன்னுடைய சந்ததிகளுக்கு வலுவான அடித்தளம் அமைக்க வேண்டும் என்று விரிவாக எடுத்துரைக்கின்றது

*2-6-10 அர்த்த சாஸ்திரம்*
=======================

பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை. ஓரு மனிதன் எப்படி பொருளீட்ட வேண்டும். அவனுக்கு என்ன மாதிரி எதிர்ப்புகள் வரும்.
தோன்றிற் புகழொடு தோன்றுக என்பதற்கேற்ப அவன் சமூகத்தில் அடையும் புகழ் முதலான விசயங்களை பற்றி கூறுகின்றது

*3-7-11 காம சாஸ்திரம்*
=====================

காமம் ஒரு மனிதன் தனது ஆசைகளையும் விருப்பங்களையும் எப்படி நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். சமூகத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் மற்றும் வாழ்வில் வெற்றி பெற தேவையான ரகசியங்கள் பற்றி கூறுகின்றது

*4-8-12 மோட்ச சாஸ்திரம்*
=======================

மோட்சமே மனிதனின் அகவாழ்விற்கான திறவுகோல்.
ஒவ்வொரு மனிதனும் எப்படி வீடு பேறு அடைவது பற்றி எடுத்துரைக்கிறது. தனி மனிதன் செய்யும் தவறுகளால் சமூகம் எப்படி பாதிப்பிற்குள்ளாகிறது, சமூகத்தால் தனி மனிதன் அடையும் பாதிப்புகளையும் பற்றி எடுத்து உரைக்கின்றது. அவனது ஆயுளுக்குள் அவன் செய்ய வேண்டியவற்றை உரைக்கின்றது.

*ஜோதிடம் ஓர் மருத்துவ இயல்.*

மனிதர்களின் உடற்கூறு தத்துவத்தை அழகாக விளக்குகின்றது. எனவே நன்கு தேர்ச்சி அடைந்த ஜோதிடன் மருத்துவனுக்கு ஒப்பாவான்.

*ஜோதிடம் ஓர் மனோதத்துவ இயல்.*

மனிதர்களின் குணாதிசயங்கள், அவர்களின் பலம் பலவீனம் என்ன, 
என்று விளக்கமாக கூறுகின்றது.

*ஜோதிடம் ஓர் வானவியல்.*

வானில் கிழக்கே எந்த பாகம் உதயமாகிறது, மேற்கில் எந்த பாகம் மறைகிறது, உச்சியில் தெரியும் பாகம் என்ன? கண்ணுக்கு தெரிமாமல் மறைந்துள்ள பாகம் என்ன, எப்போது மழை பொழியும், பருவநிலை மாற்றம் என பல தகவல்களை தருகின்றது.

*ஜோதிடம் ஓர் சமூக அறிவியல்.*

ஒரு அரசு எப்படி ஆட்சி நடக்க வேண்டும், எப்போது போர் தொடுக்க வேண்டும், புவியியல் சார்ந்த விசயங்களை கூறுகின்றது.
முன்னோர்களின் வரலாற்றை கூறுகின்றது. வரலாறு, குடிமையியல், பூகோளம் பற்றி கூறுகின்றது.

*ஜோதிடம் ஓர் ஆன்மீக இயல்.*

*ஜோதிடம் ஓர் இசைஇயல்.*

*ஜோதிடம் ஓர் மந்திரவியல்.*

*ஜோதிடமே வேதம். வேதமே ஜோதிடம்.*

ஜோதிடம் அறிந்தவன் முக்காலம் உணர்ந்த முனிவன் ஆகின்றான். சகலமும் தெரிந்த ஞானியாகின்றான்.

ஒரு மனிதன், அரசு, சமுதாயம், பூகோளம் எப்படி இயங்க வேண்டும், எப்போது இயங்க வேண்டும் என்று கூறுகின்றது.

*ஜோதிடம் கற்றுக்கொள்வதால் பெருமிதம் கொள்ளுங்கள்.*

மேலும் தகவலுக்கு = 9600666225

எங்களை அணுக